கண் கண்ட இறைநேசர்! posted byS.K.Salih (Kayalpatnam)[26 January 2017] IP: 180.*.*.* India | Comment Reference Number: 45168
நிகழ்காலத்தில் நம் கண்ணாரக் கண்ட இறைநேசர் இவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது!
இன்று எல்லோராலும் அறியப்பட்ட - கிழக்குப் பகுதியின் எண்ணற்ற ஆலிம்களும், ஹாஃபிழ்களும், நல்லொழுக்கம் நிறையப் பெற்ற சகோதரர்களும் - இந்த மஹானின் அன்பு மாணவர்கள்.
இவர்களது கைவண்ணத்தில் மிளிரும் அரபி எழுத்துக்கள், தரமிக்க ஒரு கலைஞனின் ஓவியம் போன்று இருக்கும். குருவித்துறைப் பள்ளியில் உள்ள பல கிதாபுகளில் இன்றும் அவர்களின் கைவண்ணம் ஒளிர்வதைக் காணலாம்.
காலமெல்லாம் பள்ளிவாசலே தரிப்பிடம் என்றிருந்த அவர்கள், தன் வயோதிகம் - இயலாமை காரணமாக எங்கள் குருவித்துறைப் பள்ளியின் இமாமத் பொறுப்பை விட்டும் விடைபெற்றுக்கொண்டார்கள். என்றாலும், “பேஷ் இமாம்” என்றால் அந்தப் பெயர் நானிருக்கும் வரை எனக்குத்தான்!” என்று உரிமையுடன் கூறுவார்கள்.
இமாம் அவர்கள் சுகவீனத்தால் தன் வீட்டில் ஓய்வெடுத்த காலகட்டத்தில் - என் தாய்மாமா மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் ஆலிம் அவர்கள், என் சிறிய தந்தை கம்பல்பக்ஷ் அல்ஹாஜ் எஸ்.எச்.பாக்கிர் ஸாஹிப் அவர்கள் ஆகியோருடன் இம்மஹானை அவர்களது இல்லத்தில் இருமுறையும், வேறு சில தருணங்களில் தனியாகவும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.
அவர்களும், நாமும் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக...
மர்ஹூம் அவர்களது பிரிவால் அவர்களது அன்பு குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross