சிறப்பான பதிவு posted byஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்)[30 January 2017] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45178
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரி உம்மு நுமைரா அவர்களின்
ஆக சிறந்த ஆக்கம் இது!
நம் ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டு உணர்வின் (collective consciousness) வெளிப்பாடு, முதல் வரியிலிருந்து இறுதி வரி வரை, ஒரு புள்ளி கூட குறையாமல் ஓங்கி ஒலிக்கிறது.
தன்னெழுச்சியாக துவங்கிய இளையவர்களின் இந்த போராட்டம், ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாளத்தையும் தாண்டி, பன்முக நோக்கோடு விரிவடைந்தது உண்மையில் ஒரு வரலாற்று சிறப்புதான்!!!
வரலாற்றை திருத்தியே வயிற்றை நிரப்பும் கூட்டம் இந்த அமைதியான எழுச்சியை களங்கப்படுத்தி, வழமை போல் முஸ்லிம்களின் சேவைகளை மழுங்கடிக்க முயற்சித்ததை இதைவிட சிறப்பாக கேட்டுவிட முடியாது. வாழ்த்துகள் சகோதரி!
முந்தைய கருத்துகளில் மொழிந்ததுபோல், போராட்டக்களத்தோடு இந்த உணர்வு காணாமல் போய் விடாமல், நமது அன்றாட வாழ்விலும் பயன்படுத்திட வேண்டும்.
இன்னும் பற்பல நல்ல ஆக்கங்களை வழங்கிட இறைவன் பேருதவி புரிவானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross