Re:...இவ்வளவு பேர் தானா,,,, posted bymackie noohuthambi (colombo)[06 February 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45210
நமதூரின் ஜனத்தொகை என்ன ஊரில் தற்போது இருப்பவர்களின் ஜனத்தொகை என்ன மழை வேண்டி தொழுக வந்துள்ளவர்களின் ஜனத்தொகை என்ன என்று கணக்கிட்டுப் பார்க்கும்போது நமக்கு ஏமாற்றமே மிஞ்சி நிற்கிறது.
ஒரு கல்யாணம் காட்சி, சாப்பாடு என்றால் கூடும் கூட்டம் ஒரு அரசியல் கட்சி நடத்தும் கூட்டம் கந்தூரிகள் இவற்றுக்கெல்லாம் சாரி சாரியாக வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு என்று பல பகுதிகளில் இருந்தும் குவியும் காயல்பட்டினம் மக்கள், நாட்டுக்கும் வீட்டுக்கும் ஒரு உயிர் பிரச்சினை தண்ணீர். மழை கட்டாயம் அக்டொபெர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் கொட்டி தீர்க்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையங்கள் சொல்லும் செய்திகள் நீர்த்துப் போய்விட்ட நிலையில், அல்லாஹ் நினைத்தால் மழை பெய்யும் அல்லாஹ் மறுத்தால் மழை பெய்யாது என்ற உண்மை வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.
அல்லாஹ்வின் அருளால் மழை பெய்வதற்கு நபிகள் நாயகம் காட்டி தந்த வழியில் பிரார்த்தனை ஒன்றே நமக்கு கை கொடுக்கும் என்று கை பிசைந்து நின்று இறைவனிடம் கையேந்தி மழை பெறுவதற்கு எப்படி கூட்டம் அடித்து பிடித்து ஓடி இடம் பிடித்திருக்க வேண்டும்.மாறாக யாரோ நடத்துகிறார்கள் எதற்கோ நடத்துகிறார்கள் நமக்கென்ன என்று ஊர் மக்கள் நினைத்து விட்டார்களோ என்று எண்ண தோன்றுகிறது.
அல்லாஹ்விடம் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அப்படியே அல்லாஹ்வும் உங்களுடன் நடந்து கொள்வான் என்று ஒரு திருநபி செய்தி சொல்கிறது. நபியே அடியார்கள் உம்மிடம் நம்மைப் பற்றிக் கேட்டால் அவர்களுக்கு நீங்கள் சொல்லுங்கள் நான் உங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறேன் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு உடனே பதில் அளிக்கிறேன் என்று இறைவன் சொல்வதாக உலமாக்கள் நமக்கு ஓதிக் காண்பிப்பார்கள். அப்படியானால் நாம் எங்கே தவறு செய்திருக்கிறோம் என்று நம்மை மீள் பார்வை செய்து நமது அணுகுமுறைகளை சரி செய்துகொள்ளக் கடமை பட்டிருக்கிறோம்.
நீங்கள் பிரிந்து நின்றால் நீங்கள் வலுவிழந்து விடுவீர்கள் நீங்கள் கோழைகளாகி விடுவீர்கள் என்று திருமறை வசனம் ஒன்று கூறுகிறது. அப்படியான பலவீனம் தான் மழை தொழுகைக்கு கூட்டம் வராததற்கு காரணம் என்றால் அல்லாஹ் நம்மை கருணை கண் கொண்டு பார்க்க மாட்டானே, எல்லோருக்குமான தொழுகைதானே இது. ஏன் இந்த பின்னடைவு இதயம் கனக்கிறது.
அல்லாஹ் மிக அறிந்தவன்.என்றாலும் தாயைவிட 70 மடங்கு பாசம் உள்ள ரஹ்மான் நமது பாவங்களை மன்னித்து மழை பொழிய செய்வான் என்று நம்புவோமாக..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross