செய்தி: “நிரந்தர முதல்வர் - ஆளுநர் இல்லாமல் தமிழகம் திண்டாடுகிறது!” மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தையடுத்த செய்தியாளர் சந்திப்பில் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கருத்து!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...கோட்டையில் கோமாளிகள் posted bymackie noohuthambi (colombo)[13 February 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45222
காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் இழந்த போது திமுக ஆட்சி பொறுப்பை புதிதாக ஏற்றபோது காங்கிரஸ்காரர்கள் சொன்னது ஞாபகம் வருகிறது.
கோட்டையில் கோமாளிகள் என்று ஒரு நாடகமே அரங்கேறியது. இப்போது திசை மாறி வீசுகிறது. திமுகவிலிருந்து பிரிந்து சென்று அண்ணா திராவிட முன்னேற்றக கழகம் எம்ஜியாருக்கு பிறகும் இப்படி பிளவு பட்டது. இப்போது ஜெயலலிதாவுக்கு பிறகும் பிளவு பட்டு நிற்கிறது.
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல என்று எம்ஜிஆர் பாடினார்.
இப்போது செயின்ட் ஜோர்ஜ் கோட்டையிலும் கோமாளிகள் டில்லி செங்கோட்டையிலும் கோமாளிகள் ஆட்சி நடக்கிறது. தினசரி நடக்கும் நிகழ்ச்சிகள் காண சகிக்க வில்லை. எப்படி பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த மாமன்றம் இப்படி கேவலப் படுகிறது. எப்படி பட்ட நாடாளு மன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த மாமன்றம் இப்படி மோடி பேர்வழிகளாலும் மோசடி பேர்வழிகளாலும் வழி நடத்தப படுகிறது.
5 வருடங்கள் ஒரு அற்புதமான சகோதரர் அபூபக்கர் நமதூருக்கும் கடையநல்லூருக்கும் சமுதாயக்கும் இந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்து இமாலய சாதனைகள் புரியும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் என்று கனவு கண்டு கொண்டிருந்தோம். வெண்ணை திரண்டு வரும்போது தாளி உடைந்ததுபோல் இருக்கிறது. மனம் வேதனைப் படுகிறது.
கூடிய விரைவில் தமிழகத்தில் ஒரு நல்லாட்சி ஏற்பட வேண்டும். அபூபக்கர் அவர்கள் நற்பணிகள் தொடர வேண்டும் என்று நாமெல்லாம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
ALLAAHUMMA LAA THUSALLITH ALAINA MANN LAA YAKHAFUKA VALAA YARHAMNAA .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross