நிரந்தர முதல்வர், ஆளுநர் இல்லாமல் தமிழ்நாடு திண்டாடுவதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் - கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் கூறியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்ல¦ம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம், காயல்பட்டினம் தீவுத்தெருவில் நேற்று (12.02.2017. ஞாயிற்றுக்கிழமை) 14.00 மணியளவில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் பீ.மீராசா மரைக்காயர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்டப் பொருளாளர் திரேஸ்புரம் மீராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அண்மையில் காலமான - கட்சியின் தேசிய தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப், ‘எழுத்தரசர்’ ஹனீஃப், மூத்த நகர கிளை மூத்த உறுப்பினர் சுல்தான் என்ற எஸ், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் நெல்லை மாவட்டத் தலைவர் மவ்லவீ டீ.ஜெ.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜீயின் மனைவியார் ஆகியோரின் மறைவுக்கு இக்கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து, அவர்களது பிழை பொறுப்பிற்காகவும், மண்ணறை - மறுமை நல்வாழ்விற்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் - கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிறைவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது:-
வரும் மார்ச் 11ஆம் நாளன்று நெல்லையில் நடைபெறவிருக்கும் சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சுமார் 8 ஆயிரம் பேர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம் தற்போது நிலையற்ற சூழ்நிலையில் இருந்து வருகிறது. இச்சூழலை மத்திய அரசு உடனடியாகக் கவனத்திற்கொண்டு, மாநிலத்தில் நிரந்தர முதல்வர் - நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும்... இந்த அசாதாரண சூழலைக் கண்டு மோடி அரசு வேடிக்கை பார்க்காமல், மாநிலத்தின் நலன் கருதி - விரைவான நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்...
இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில், கட்சியின் காயல்பட்டினம் நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், நகர பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், தூத்துக்குடி மாநகர தலைவர் நவ்ரங் ஸஹாபுத்தீன், நிர்வாகிகளான என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன், சாத்தான்குளம் மீராசா, ஷேக்னா, எம்.இசட்.சித்தீக், கே.எம்.என்.முஹம்மத் உமர், பெத்தப்பா சுல்தான், அஹ்மத் ஸாலிஹ், எஸ்.எம்.பி.முஹம்தம் முஹ்யித்தீன் மற்றும் ஆத்தூர், ஏரல், குரும்பூர், புறையூர், சாத்தான்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் கிளைகளிலிருந்து கட்சியின் பொறுப்பாளர்களும், அங்கத்தினரும் கலந்துகொண்டனர்.
தகவல் & படம்:
வி.குமார்
|