பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசி இணைப்பு வைத்திருந்து, பின்னர் துண்டிக்கப்பட்டவர்கள் மீண்டும் தொலைபேசி இணைப்பை நிறுவல் கட்டணம் (installation charge) இன்றி பெற்றுக்கொள்ள முடியும் என்றும்,
தரைவழி தொலைபேசி இணைப்பு மூலம் இந்தியா முழுவதுமுள்ள அனைத்து நெட்வர்க்குகளின் மொபைல்கள் மற்றும் தரைவழித் தொலைபேசி இணைப்புகளுக்கும் - அன்றாடம் 21.00 மணி முதல் மறுநாள் 07.00 மணி வரை முற்றிலும் இலவசமாகப் பேசிக்கொள்ளலாம் என்றும்,
இன்னும் சில சலுகைகளையும் விளக்கி - இம்மேளாவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு, பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி மறு இணைப்பு மேளா, இன்று காயல்பட்டினம் தொலைபேசி நிலைய வெளி வளாகத்தில் நடைபெற்றது.
கணக்கு அலுவலர் ராஜன், துறைப் பொறியாளர் மணிகண்டன், இளநிலை அலுவலர் தங்கலிங்கம், தொழில்நுட்ப உதவியாளர் அருள் ரூபன், மூத்த அலுவலர் தளவாய் பாண்டியன் ஆகியோர் இம்முகாமை இணைத்து வழிநடத்தினர். இம்முகாம் மூலம், ஏற்கனவே தரைவழி தொலைபேசி இணைப்பைத் துண்டித்த 33 பேர் புதிதாக இணைப்பு பெற்றுள்ளனர். வாடிக்கையாளர்களின் நிலுவைத் தொகை வகையில், 44 ஆயிரத்து 644 ரூபாய் இம்முகாம் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.
புதிய இணைப்புக்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். BSNL சிம் கார்டுகளும் கனிசமான அளவில் விற்பனையாகியுள்ளது. ப்ராட்பேண்ட் இன்டர்நெட் வசதி, பிற மொபைல் நெட்வர்க்குகளிலிருந்து BSNLக்கு மாறுவது (MNP) உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
தகவல்:
தங்க லிங்கம்
துணைப் பொறியாளர்
காயல்பட்டினம் தொலைபேசி நிலையம்
|