சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்நலனுக்காக - 2 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 58-வது செயற்குழு கூட்டம் கடந்த 10.02.2017 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் எமது மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஃபிழ் தாவூத் இத்ரீஸ் அவர்களின் இல்லத்தில் ஹாஃபிழ் S.A.C. ஸாலிஹ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, எமது மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஃபிழ் தாவூத் இத்ரீஸ் அவர்கள் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைக்க, அதனை தொடர்ந்து எமது மன்றத்தின் முன்னாள் தலைவர் சகோதரர் M.E.L. நுஸ்கி அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.
இரங்கல்
மன்ற தலைவர் சகோதரர் நூஹு அவர்களின் தந்தை, எமது மன்றத்தின் முன்னாள் தலைவர் சகோதரர் M.E.L. நுஸ்கி அவர்களின் தயார் மற்றும் எமது மன்றத்தின் முன்னாள் துணை செயலாளர் சகோதரர் S.M.A. சதக்கத்துல்லாஹ் அவர்களின் தந்தை ஆகியோரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பாவங்களை மன்னித்து அவர்களது அமல்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு ஜன்னத்துல் ஃபிரதெளஸை வழங்கிடுவானாக. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அல்லாஹ் அவர்களுக்கு பொறுமையைத் தந்தருள பிரார்த்தனை செய்யப்பட்டது.
அறிமுகவுரை:
மன்ற தலைவர் சகோதரர் நூஹு அவர்கள் நடப்பு ஆண்டில் (2017) மன்ற செயற்குழுவில் புதிதாக இணைந்துள்ள செயற்குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். புதிய செயற்குழு உறுப்பினர்களுக்கும், சிறப்பு பார்வையாளர்களுக்கும் மன்ற செயல்பாடுகளை பற்றி விளக்கம் அளித்தார்.
சகோஹரர் V.M.T. அப்துல்லாஹ், சகோதர் சேக் அப்துல் காதர் சூஃபி, சகோதரர் ஸதக் ஷமீல் மற்றும் சகோதர் யாசர் தாஜுத்தீன் ஆகியோர் புதிய செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
மக்கள் மருந்தகம்
ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் அமைப்பால் விரைவில் துவக்கப்படவுள்ள “மக்கள் மருந்தகம்” (Generic Medical Shop) பற்றியும், அதன் அவசியத்தை குறித்தும் மன்ற தலைவர் சகோதரர் நூஹு அவர்கள் அனைவருக்கும் விளக்கம் அளித்தார்.
“மக்கள் மருந்தகம்” (Generic Medical Shop) பணிக்காக, ரியாத் காயல் நல மன்றம் சார்பில் ரூபாய் 60,000/- ஏற்கனவே ஷிஃபா நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டுள்ளது, செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு இணங்க மேலும் ருபாய் 10,000/- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
மன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு:
நகர அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்கும் திட்டத்தினை அனைத்து உலக காயல் நல மன்றங்களையும் இணைத்து செயல்படுத்துதல் சம்பந்தமாக கத்தார் காயல் நல மன்ற செயலாளர் எம் மன்றத்திற்கு அனுப்பிய கடிதம் வாசிக்கப்பட்டு, செயற்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்தபின், எம் மன்றத்தின் பங்களிப்பாக ரூபாய் 25,000/- வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நமது சமுதாய மாணவர்களை IAS, IPS போன்ற தேர்வுக்கு தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து சென்னையில் அமைந்துள்ள S IAS Academy மூலம் பயிற்சி அளிப்பது சம்பந்தமாக IQRA மூலம் பெறப்பட்ட கடிதம் வாசிக்கப்பட்டது. அவ்வாறு பயிற்சி பெரும் மாணவர்களுக்கு உதவித்தொகை IQRA மூலம் வழங்க படுவதாகவும், அதற்க்கான பங்களிப்பை ரியாத் காயல் நல மன்றமும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். செயற்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்தபின், எம் மன்றத்தின் பங்களிப்பாக ரூபாய் 20,000/- வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
நகர் நல உதவி திட்டங்களுக்காகவும், ஷிஃபா/இக்ரா அமைப்புகள் மற்றும் நேரடியாக பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து மொத்தமாக ரூபாய் 2,84,000/- வழங்க மன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் பார்வையாளர்களாக கலந்து கொண்ட சகோதரர் மூஸா, ஹாஃபிழ் அஹ்மத் தாஹிர் மற்றும் சகோதரர் யாசர் அரபாத் ஆகியோர் தங்களை கூட்டத்திற்கு அழைத்ததிற்கு நன்றி கூறி, தங்களுடைய கருத்துக்களையும் மேலான ஆலோசனைகளையும் பகிர்ந்துக் கொண்டார்கள்.
சகோதரர் S.L. ஸதக்கத்துல்லாஹ், ஹாஃபிழ் S.A.C. ஸாலிஹ், சகோதரர் ஷஃபியுல்லாஹ் மற்றும் சகோதரர் இப்ராஹீம் ஃபைசல் ஆகியோரின் அனுசரணையில் மதிய விருந்து வழங்கப்பட்டது. இக்கூட்டம் நடத்த இடம் தந்த எமது மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஃபிழ் தாவூத் இத்ரீஸ் அவர்கள் அனைவருக்கும் மாலை தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார்.
இறுதியாக சகோதரர் S.L. சதக்கத்துல்லாஹ் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில பார்வையாளராக கலந்து கொண்ட ஹாஃபிழ் அஹ்மத் தாஹிர் அவர்களின் துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.N.முஹம்மத் ஹஸன்
|