காயல்பட்டினம் நகர மகளிர் மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பால் துவக்கப்பட்டுள்ள தையலகத்தை, நகர மகளிர் நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு, விளக்கப் பிரசுரம் மூலம் - அவ்வமைப்பால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
காயல்பட்டினத்தில் தையல் தொழில் செய்வதற்காக தையல் கருவிகளைக் கேட்டு ஏழை மக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒருபுறமிருக்க, அவ்வாறு தையல் கருவிகள் வழங்கப்பட்டவர்கள் அதை முறையாகப் பயன்படுத்தி தொழில் செய்வது மிகவும் குறைவு என்ற நிலையைக் கருத்திற்கொண்டு, அது போன்ற கோரிக்கைகளை முன்வைக்கும் பயனாளிகளுக்கு தையல் துறையில் தகுந்த வேலைவாய்ப்பை அளித்து, வருமானமீட்ட வழிகாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், “KUF ஹாங்காங் கார்மெண்ட்ஸ் & டெய்லரிங்” எனும் பெயரில் தையல் நிறுவனம் உருவாக்கப்பட்டு, 26.07.2016. செவ்வாய்க்கிழமையன்று துவக்கி வைக்கப்பட்டது.
இத்தையலகத்தை, காயல்பட்டினம் நகர மகளிர் இன்னும் அதிகளவில் பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தி, தற்போது அவ்வமைப்பின் சார்பில் விளக்கப் பிரசுரம் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-
தகவல் & படம்:
P.M.I.ஸஊத் (செயலாளர் - KUFHK) |