ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலத் திட்ட உதவிகள் பல அறிவிக்கப்பட்டுள்ளதோடு, சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நல மன்றத்திற்கு அண்மையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ.ஆர்.ரிஃபாய் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
அபூதபீ காயல் நல மன்றத்தின் 47 ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 10-02-2017 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் S.I.முஹம்மது சாலிஹ் அவர்களின் தலைமையில் மன்றச் பொதுச் செயலாளர்: மக்பூல் அஹ்மத் மற்றும் பொருளாளர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் ஆகியோரது இல்லத்தில் வைத்து கூடியது S.H.மஹ்மூத் முல்தஜிம் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு!!
சென்ற ஆண்டு போல இவ்வாண்டும் அபூதபீ காயல் நல மன்றதத்தின் சார்பில் நலத்திட்டங்களுக்கு குறிப்பாக கல்வி, மருத்துவம், இமாம்-பிலால் ஊக்கத்தொகை, ரமழான் மாத உணவுப்பொருள் வழங்குதல், ஆகியவற்றுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டு செயற் குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது..
சீருடை திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு!!
கத்தார் காயல் நல மன்றத்தின் மாணவ ,மாணவிகளின் சீருடை திட்டத்தில் இணைந்து இவ்வருடம் முதல் 30 பேருக்கு முறையே 15 மாணவர்களுக்கும், 15 மாணவிகளுக்கும் சீருடை வழங்கிட செயற் குழுவில் முடிவு செய்யப்பட்டது.
துளிர் பள்ளிக்கான VOICE RECORDER INSTRUMENT உதவி!!
துளிர் நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி கேள்வி மற்றும் ,பேச்சு பயிற்சிக்கான (VOICE RECORDER INSTRUMENT FOR SPEECH CHALLEGEND CHILDREN) தேவைக்கான உதவி RS 15,000 தொகையை உறுப்பினர்களின் தனிப்பட்ட உதவி மூலம் பெறப்பட்டு வழங்கப்பட்டது.
பாஸ்போர்ட் முகாம்!!
நகரில் மக்கள் பாஸ்போர்ட் பெறுவதில் அதிகமான சிரமம் ஏற்படுவதோடு சில ட்ராவல்ஸ்கள் சரியான முறைப்படுத்தப்பட்ட பாதையில் செல்லாமல் ,அணைத்து ஆவணங்களும் முறையாக இருந்தும் குறித்த நேரத்தில் கடவு சீட்டு பெறமுடியாமல் அதிகமான தொகைகள் செலவு செய்தும் இழுத்தடிக்கப்படுவதால் பெரும்பாலோர் மனஅழுத்தத்தில் உள்ளாகின்றனர். இந்நிலையை போக்கும் முகமாக எம் அபுதாபி மன்றத்தின் மூலம் ஊரில் ஒரு பாஸ்போர்ட் முகாமை ஊரின் தொண்டு நிர்வனங்களோடு இணைந்து நடத்திடவும் இதன் மூலம் பாஸ்போர்ட் பெறுவதில் சிரமங்களை குறைத்து எளிதாய் முறைப்படுத்திட முகாம் செயல் திட்டத்தை பெறுவதற்கு ஒருங்கிணைப்பாளராக மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ அவர்களை செயல் பட முடிவு செய்யப்பட்டது.
ஜித்தா காயல் மன்றத்தின் 100- வது செயற்குழு / புது நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்!!
ஜித்தா காயல் மன்றத்தின் 1௦௦-வது செயற்குழு மற்றும் புதிதாய் அமையப்பெற்ற நிர்வாகத்திற்கும் அபுதாபி மன்றத்தின் சார்பாக தலைவர்,நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ அவர்களின் துஆ மற்றும் கப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சாளை S.A.H. தாவூத் அவர்களின் அனுசரணையில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு காயல்பட்டினம் பாரம்பரிய வெண்கஞ்சி மற்றும் வடை வழங்கி உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
தகவல்:
A.R.ரிஃபாய்
மக்கள் தொடர்பு செயலர்
படங்கள்:
துணி முஹம்மத் உமர் அன்ஸாரீ
(இணைப் பொருளாளர்)
|