சிங்கப்பூர் காயல் நல மன்றத்தால் BBQ – சூட்டுக்கறி ஏற்பாட்டுடன் நடத்தப்பட்ட குடும்ப சங்கம நிகழ்ச்சியில், அம்மன்றத்தின் உறுப்பினர்கள் & அவர்களது குடும்பத்தினர் உட்பட 70 காயலர்கள் பங்கேற்றனர்.
11.02.2017. அன்று 17.00 மணிக்கு, சிங்கப்பூர் Pasir Ris பூங்காவில், மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன் தலைமையில், BBQ - சூட்டுக் கறி ஏற்பாட்டுடன் குடும்ப சங்கம நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
குறித்த நேரத்தில் உறுப்பினர்கள் தம் குடும்பத்தினருடன் நிகழ்விடம் வந்தடைந்தனர். அனைவரும் கொண்டாடும் வகையில் அன்றைய வானிலை மிகவும் இதமாகவும், ரம்மியமாகவும் இருந்தது.
அனைவரையும் வரவேற்கும் வகையில் துவக்கமாக இஞ்சி தேனீர், வடை பரிமாறப்பட்டது.
பின்னர், செயற்குழு உறுப்பினர் எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் கைவண்ணக் கலவையில், ஒரு BBQ Pit அடுப்புக்கு மூவர் என மொத்தம் 3 BBQ Pitகளில் 9 பேர் நின்று, கோழி இறைச்சியைச் சுட்டுச்சுட்டு வழங்க, குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் குதூகலத்துடன் அதை உட்கொண்டு மகிழ்ந்தனர்.
சூட்டுக்கறி நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பூங்காவின் பசுமைத் தரையில் மழலையர் ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர்.
மஃக்ரிப் தொழுகை ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட்ட பின், அனைவருக்கும் இரவுணவு பரிமாறப்பட்டது. பின்னர், அனைவரும் இணைந்தமர்ந்து - தாயகம் காயல்பட்டினத்தின் நடப்பு நிலவரம் குறித்து தீவிர அரட்டையில் ஈடுபட்டனர்.
மறக்கவியலா நினைவுகளுடன் 22.00 மணிக்கு அனைவரும் வசிப்பிடம் திரும்பிச் சென்றனர்.
தகவல்:
M.M.மொகுதூம் முஹம்மத்
(துணைத்தலைவர், சிங்கை கா.ந.மன்றம்)
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
தமிழாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ் |