திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் மாணவியருக்கு - காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் - அப்பள்ளி பற்றிய பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, துளிர் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லுhரியின் 3ஆம் ஆண்டு மாணவிகள் 44 பேர் மனவளர்ச்சி குறைபாடு, முளை மூடக்கு வாதம், புற உலக சிந்தனையற்ற குழந்தைகளின் நிலையினையும் அவர்களை அடையாளக் காண அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி பற்றி அறிந்துகொள்வதற்காக 11.02.2017 அன்று துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரியின் பேராசிரியர்கள் சந்திரா, செல்வகுமாரி ஆகியோர் தலைமையில் வருகை தந்தனர்.
துளிர் நிறுவனர் வக்கீல் அஹமது தலைமையில் காணொலி கூடத்தில் செவிலியர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. துளிர் குழந்தைகளின்; இறைவணக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. துளிர் பள்ளியின் செயலர் எம்.எல்.சேக்னா லெப்பை வரவேற்புரை வழங்கினார். வருகை தந்த அனைவரும் தங்களை சுயஅறிமுகம் செய்து கொண்டனர்.
நிறுவனர் வக்கீல் அஹமது துளிரின் செயல்பாடுகளை குறித்து விளக்கியதோடு சிறப்புக் குழந்தைகளின் இன்றைய சமுக நிலைகளையும் அவர்களிடம் எவ்விதமான அணுகுமுறைகளை பின்பற்றுவது என்பது பற்றி காணொலி மூலம் விளக்கி கூறினார்.
துளிர் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் இசட்.சித்தி ரம்ஜான் மனவளர்ச்சி குறைபாடு (MR), ஆட்டிஸம் (புற உலக சிந்தனையற்ற), ADHD Downs Syndrome, கற்றல் திறன் குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வு முறைகளை பற்றி காணொலி மூலம் விளக்கி கூறினார். இதனை தொடர்ந்து திருமதி. வெங்கடேஸ்வரி (Occupational therapist) முளை மூடக்கு வாதம், தசை சிதைவு நோய் போன்ற உடல் நிலை குறைபாடு ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதற்கான இயன் முறை சிகிச்சையினை பற்றி காணொலி மூலம் விளக்கி கூறினார்.
செவிலியர் மாணவியர்கள் துளிரின் பயிற்சி வகுப்புகள், இயல் முறை சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு இயலா நிலைக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறைகளை; நேரடியாக தெறிந்து கொண்டதோடு;. அவர்களுக்கு சிறப்பு குழந்தைகள் பற்றி ஏற்பட்ட அனைத்து சந்தேகக் கேள்விகளுக்கு சிறப்பாசிரியர்கள் மூலம் விளக்கம் பெற்றனர்.
செவிலியர் மாணவிகள் துளிர் குழந்தைகளுடன் இணைந்து இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி குழந்தைகளோடு குழந்தையாக மகிழ்ந்தனர்.
இறுதியாக நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவியருக்கும் பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.
செவிலியர் கல்லூரியின் பேராசிரியர் சந்திரா, செல்வகுமாரி பேசும் போது துளிரின் செயல்பாடுகள் தங்களை நெகிழச் செய்ததாகவும் இந்த நாளில் சிறப்பு குழந்தைகள் பற்றி பல விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும் அதற்கு துளிரின் நிர்வாகத்தினருக்கு மிகவும் நன்றி என்றும் கூறியதோடு இந்த பயிற்சியினை எங்கள் செவிலியர் மாணவியருக்கு பெறுவதற்காக துளிரினை தேர்வு செய்தமைக்கு எங்கள் செவிலியர் மாணவியர் சார்பாக சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரியின் முதல்வருக்கு நன்றியினையும் தெரிவித்தனர். துளிர் பள்ளியின் கண்காணிப்பாளர் திரு. விஜயன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|