காயல்பட்டினத்திற்கு ‘108 ஆம்புலன்ஸ்’ வசதி வேண்டும் என்று கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் சென்னையிலுள்ள அரசு செயலர், திட்ட இயக்குநரிடம் நேரில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் - மாநிலம் முழுவதும், 800க்கும் மேற்பட்ட, அதிநவீன ஆம்புலன்ஸ் (108 சேவை) வாகனங்கள் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில், இறுதியாக பெறப்பட்ட தகவல்படி - 14 ஆம்புலன்ஸ் (108 ஆம்புலன்ஸ் சேவை), அரசு சார்பில் இயக்கப்படுகிறது.
ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நகரமாகவும், மாவட்டத்தின் இரு நகராட்சிகளில் ஒரு நகராட்சியாகவும் உள்ள காயல்பட்டினத்திற்கு 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படவில்லை.
45,000 மக்கள் வாழும் ஊர் என்பதைக் கருத்திற்கொண்டும், இவ்வூரைச் சுற்றியுள்ள வெவ்வேறு ஊர்களில் - இங்குள்ள மக்கள், மருத்துவம் செய்து வருவதைக் கருத்திற்கொண்டும், காயல்பட்டினம் நகருக்கு - 108 ஆம்புலன்ஸ் சேவையை வழங்கிடக் கோரி, சென்னையிலுள்ள தமிழக அரசு சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS இடமும், 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைப் பராமரிக்கும் Tamil Nadu Health Systems Project (TNHSP) துறையின் திட்ட இயக்குனர் டாக்டர் தரேஸ் அஹ்மத் IAS இடமும் - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் நேரில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
|