காயல்பட்டினம் நகராட்சி எல்லையில் இயங்கும் DCW தொழிற்சாலை - பிப்ரவரி 10, 2017 அன்று இரவு 9:30 மணி முதல் மூடப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தகவலை மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளுக்கு, பிப்ரவரி 13 அன்று அந்நிறுவனம் வழங்கியுள்ளது.
முன்னதாக, பிப்ரவரி 3 அன்று - தொழிற்சாலையில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து, மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளுக்கு சுருக்கமான விபரங்களை - DCW நிறுவனம் - சமர்ப்பித்திருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு:
--- நிறுவனத்தின் தொழிலாளர்கள், எந்த முன்னறிவிப்புமின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்
--- தயாரிக்கப்பட்ட பொருட்களை வெளியில் கொண்டு செல்லவும், மூலப்பொருட்களை தொழிற்சாலைக்குள் கொண்டு வரவும் தடங்கல் ஏற்படுத்துகிறார்கள்
--- அதன் காரணமாக பிப்ரவரி 4 முதல் உற்பத்தி நிறுத்தப்படும்; அன்றைய தின - காலை ஷிஃப்ட் முதல், பணியாளர்கள் நீக்கப்படுவார்கள்
--- தொழிலாளர் சங்கத்துடன் நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிலையில், இவ்வாறு - எந்த முன்னறிவிப்புமின்றி தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியதால், உற்பத்தியை நிறுத்த வேண்டிய முடிவு எடுக்கப்பட்டது.
--- விற்பனை தடைப்பட்டுள்ள காரணத்தால், தினமும் 3 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்
--- இழப்பை சரிக்கட்ட காப்பீடு எதுவும் செய்யப்படவில்லை
|