அளவையிலும் எடையிலும் மோசம் செய்து குறைக்கக் கூடியவர்களுக்கு கேடு உண்டாவதாக அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுக்காக மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கினால் நிறைவாக அளந்து வாங்கி கொள்கின்றனர்.ஆனால் தாங்கள் மற்றவர்களுக்கு அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து மோசடி செய்து அவர்களை நஷ்டப்பப்படுத்தி விடுகின்றனர். அத்தகையோர் நிச்சயமாக தாம் மறுமையில் உயிர் கொடுத்து எழுப்பப் படுபவர்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க வில்லையா...
என்று திருமறை குர் ஆன் கேட்கின்றது.
இந்த இரண்டையும் எண்ணிப் பார்ப்பவர்கள் இத்தகைய தவறுகளை செய்ய மாட்டார்கள்.
இந்த ஊடகங்கள் நமதூரில் காலூன்றிய பிறகுதான் உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. புதிய தலைமுறை, நியூஸ் 18 சேனல் 7 சேனல் என்று எக்கசக்கமாக ஊடகங்கள் நாள் தோறும் நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை மக்கள் கண் முன்னே ஒளி பரப்பி ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கொண்டிருக்கும் சகாப்தம் இது.இந்த காலத்தில் ஒரு சிறிய தவறும் கூட விசுவ ரூபம் எடுத்து எல்லா ஊடகங்களிலும் வந்து விடும் என்ற பயம் இல்லாமல் இதை செய்கிறார்கள் என்றால் இவர்கள் அறியாமையை என்னென்று சொல்வது.
இருட்டினில் வாழும் மனிதர்களே கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள் நல்லவர் உலகம் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள்.
இப்படி நல்ல விஷயங்களை அவ்வப்போது வெளிக் கொணர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் எல்லா இணையதளங்களையும் கட்சி கொள்கை மாச்சரியமின்றி எல்லோரும் பாராட்ட வேண்டும் அவர்களை உற்சாகப படுத்த வேண்டும் அவர்களுக்கு சமுதாயத்தில் உரிய அங்கீகாரம் வழங்க படவேண்டும்.
வீண் விவாதங்களை விடுத்து இப்படியான ஆக்கபூர்வமான வேலைகளை செய்யும் எல்லா இணையதளங்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross