காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் செயல்புரியும் 15 ரேஷன் கடைகளில் ஒன்று மேலப்பள்ளி அருகில் உள்ள ரேஷன் கடை (CP085). இந்த கடையில் - வெள்ளியன்று (24-2-2017), தான் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கியதாக குறுந்தகவல் (SMS) வந்துள்ளது என்றும், ஆனால் தான் மண்ணெண்ணெய் வாங்கவில்லை என்றும், நடப்பது என்ன? குழுமத்தின் - 5வது வார்டு பெண்கள் குழும உறுப்பினர் ஒருவர் பதிவு போட்டிருந்தார். இது போல், அந்த ரேஷன் கடையில் பொருட்கள் பெறும் பலரும் தகவல் பெற்றுள்ளனர்.
இது சம்பந்தமாக - நடப்பது என்ன? குழுமம் - உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக அந்த ரேஷன் கடையின் பொறுப்பாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தகவல் வழங்கிய நடப்பது என்ன? குழுமத்திற்கு பதில் அனுப்பியுள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் IAS,
"சமூக ஊடகங்கள் தூரத்தை சுருக்கி, நேரத்தை மிச்சம் பிடிக்க உதவுகின்றன. காயல்பட்டினம் மக்கள் இதனை வெகு சிறப்பாக பயன்படுத்துகிறார்கள். நான் உங்கள் அனைவருக்கும் பாராட்டுதல் தெரிவித்துக்கொள்கிறேன்"
என தெரிவித்துள்ளார்.
|