பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிறுவன நாளை முன்னிட்டு காயல்பட்டினத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் செய்தியறிக்கை:-
“இந்தியாவின் இதயப் பகுதிகளில் நமது பயணம்"
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா 10ம் ஆண்டில் அடியெடுத்தில் வைப்பதை முன்னிட்டு அதன் துவக்க நாளான பிப்ரவரி 17 முதல் அணிவகுப்பு, பொதுக் கூட்டங்கள், கொடியேற்று நிகழ்ச்சிகள், நலத்திட்ட பணிகள் ஆகியன தேசம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் 28 - 2 - 2017 செவ்வாய்க்கிழமை மாலை 4:45 மணியளவில் தெருமுனைக் கூட்டம் மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் திருச்செந்தூர் பகுதி தலைவர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். திருவை பகுதி தலைவர் A.அப்துல் காதர் சிறப்புரையாற்றினார். SDPI கட்சியின் மருத்துவப் பிரிவு தலைவர் S.M. K முஹைதீன், மற்றும் SS முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மரக்கன்றினை வழங்க, சிறப்பு அழைப்பாளராக நகர த.மு.மு.க நிர்வாகி மற்றும் திரளாக பொதுமக்கள் இலவச மரக்கன்றுகளை பெற்றுச் சென்றனர்.
இறுதியாக காயல் நகரச் செயலாளர் K. நிஸார் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அப்பாஸ்
(யூனிட் தலைவர் - PFI காயல்பட்டினம் கிளை)
|