காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் 38ஆவது விளையாட்டு விழா & ஆண்டு விழா ஆகியன - 18.02.2017., 19.02.2017. சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில், பள்ளி மைதானத்தில் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
விளையாட்டு விழா
09:30 மணியளவில் விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் நிறுவனர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், தாளாளர் ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்ஸுத்தீன், துணைச் செயலாளர் கே.எம்.டீ.சுலைமான், இயக்குநர் ரத்தினசுவாமி, முதல்வர் டி.ஸ்டீபன், தலைமை ஆசிரியை சிரோன்மணி ஜெயமுருகன் ஆகியோர் முன்னிலை வகிக்க, பாளையம் முஹம்மத் ஹஸன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விழாவை கொடியசைத்து முறைப்படி துவக்கி வைத்தார்.
மாணவ-மாணவியரின் அணிவகுப்பு, ஒலிம்பிக் தீபம், பிரமிடு கூட்டு உடற்பயிற்சிகள், சேலை நடனம், ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் ஆகிய அணிகள் இல்ல அலங்கரிப்புகள் போன்றவை கண்ணையும், கருத்தையும் கவர்ந்தன.
ஆசிரியையரான எஸ்.இசட்.ஃபாத்திமா ஷீரீன், ஆயிஷா ஸமீனா ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். உடற்பயிற்சி ஆசிரியை ஆர்.சுப்புலட்சுமி விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
பரிசளிப்பு விழா
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவை - ஆசிரியையர் எம்.என்.ஏ.ஹஸீன் முஃப்லிஹா, ஆயிஷா ஸமீனா ஆகியோர் நெறிப்படுத்த, நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்து - சாதனை மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.
மகளிர் பிரிவு ஆண்டு விழா
பள்ளியின் 38 ஆவது ஆண்டு விழா 16.30 மணிக்கு நடைபெற்றது. பள்ளி மாணவர் பேரவைத் தலைவர் எஸ்.ஏ.கே.அஹ்மத் ஃபாத்திமா தய்யிபா வரவேற்புரையாற்றினார். தலைமையாசிரியை சிரோன்மணி ஜெயமுருகன் பள்ளியின் 2016 - 2017 பருவத்திற்கான ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க்றிஸ்டி மெர்ஸி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினார்.
கடந்த கல்வியாண்டில் – 10ஆம், 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் பள்ளியளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியருக்கு தங்க நாணயம், இரண்டாம் - மூன்றாமிடங்களைப் பெற்றோருக்கு முறையே 1500, 1000 ரூபாய் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.
கடந்த கல்வியாண்டில் - ஆசிரியர்களுள் சிறந்த வருகைப் பதிவைக் கொண்டிருந்த ஆசிரியை எஸ்.ஏ.மர்யம் ஃபாத்திமாவுக்கு தங்க நாணயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவ-மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாணவர் பேரவை துணைத் தலைவர் எம்.எம்.செய்யித் அஜீபா நன்றி கூறினார். ஆசிரியையரான பி.எம்.ஆயிஷா ஸமீஹா, டபிள்யு.கே.ஏ.காதிர் ஆயிஷா ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். நாட்டுப்பண், துஆ, ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியை, மேலாளர், ஆசிரியையர், அலுவலர்கள் செய்திருந்தனர்.
ஆண்கள் பிரிவு ஆண்டு விழா
ஆண்கள் பிரிவு மாணவர்களுக்கான பள்ளியின் 38ஆவது ஆண்டு விழா, 19.02.2017. ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்றது. வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி துணைத்தலைவர் ஆர்.எஸ்.அப்துல் காதிர், நிறுவனர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், நகரப் பிரமுகர்களான கீ.புகாரீ, கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், டாக்டர் பீ.ஏ.எம்.ஜாஃபர் ஸாதிக், எம்.எம்.சுல்தான், மாஸ்டர் எம்.ஏ.புகாரீ, பள்ளி இயக்குநர் ஆர்.இரத்தின சாமி, தாளாளர் & செயலாளர் ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்சுத்தீன், துணைச் செயலாளர்களான கே.எம்.டீ.சுலைமான், என்.எம்.அப்துல் காதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் முஹம்மத் ரஊஃப் வரவேற்புரையாற்றினார். முதல்வர் டி.ஸ்டீஃபன், 2016 – 2017 பருவத்திற்கான பள்ளியின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
பரிசளிப்பு விழா
100, 200, 400, 1500 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டல், உயரம் தாண்டல், தொடர் ஒட்டம், கைப்பந்து, கால் பந்து, மட்டைப் பந்து, பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு எம்.எம்.சம்சுத்தீன், எஸ்.எல்.புகாரீ மவ்லானா, வாவு எம்.எம்.உவைஸ், எம்.ஐ.முஹம்மத் நூஹ் உள்ளிட்ட அவையோர் பரிசுகளை வழங்கினர்.
தொடர்ந்து, மாணவர்களின் பன்மொழிப் பாடல்கள், பேச்சு, நாடகம் உள்ளிட்ட பல்சுவை கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
ஆசிரியையரான ம.கோமதி, மு.கோமதி, சந்தான லட்சுமி ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். நன்றியுரை, நாட்டுப்பண், துஆ, ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியர், மேலாளர், ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
|