காயல்பட்டினம் வழி மாநில நெடுஞ்சாலையில் பழுதுபட்ட பகுதிகளில் புனரமைப்புப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தெரிவித்துள்ளது. விரிவான விபரம்:-
காயல்பட்டினம் வழியாகச் செல்லும் மாநில நெடுஞ்சாலை SH 176இல் – தாயிம்பள்ளி சந்திப்பு, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சந்திப்பு ஆகிய பகுதிகளில் குண்டுகுழியுமாக உள்ளதாகவும், அவற்றைச் சீரமைக்கக் கோரியும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக, கடந்த பல மாதங்களாக - மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத் துறையின் கோட்டப் பொறியாளர் & கோட்ட துணைப் பொறியாளர் ஆகியோரிடம் தொடர்ந்து மனுக்கள் வழங்கப்பட்டு வந்தன.
நிர்வாக ஒப்புதல் - நிதி ஒதுக்கீட்டுக்காக இப்பணி காத்திருப்பில் உள்ளதாக தொடர்ந்து பதில்கள் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகள், 01.02.2017. அன்று சென்னையிலுள்ள நெடுஞ்சாலைத் துறையின் அரசு முதன்மை செயலரும், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலருமான ராஜீவ் ரஞ்சன் IAS இடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, குண்டுகுழியுமாக பகுதிகளை கடந்த வாரம் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் சரிசெய்தனர். நேற்று, அப்பகுதிகளில் புதிய தார்சாலை அமைத்து புனரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|