ஒரே வாரத்தில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாக ஆணையருக்கு (CMA) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவனிப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் உறுதியளித்துள்ளார். விரிவான விபரம்:-
காயல்பட்டினம் நகராட்சியில், 15ஆவது வார்டு சிவன் கோவில் தெருவில் சில நாட்களுக்கு முன் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலியில் சிகிச்சை பெறுவதாக தகவல் வந்தது.
01ஆவது வார்டு கோமான் நடுத்தெருவைச் சேர்ந்த ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது தகவல் வந்துள்ளது.
ஒரு சில நாட்கள் இடைவெளியில் ஒரே ஊரில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டு, இது தொடர்பாக சிறப்புக் கவனம் செலுத்தக் கோரி - சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் கோ.ப்ரகாஷ் IAS, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் IAS ஆகியோருக்கு – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக வேண்டுகோள் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து தான் விசாரிப்பதாக, “நடப்பது என்ன?” குழுமத்திடம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
|