தமிழகத்தில் 12ஆம் வகுப்பு (ப்ளஸ் 2) அரசுப் பொதுத் தேர்வுகள் இன்று துவங்கின. இத்தேர்வை எழுதச் செல்லும் மாணவ-மாணவியருக்குத் தேவையான அறிவுரைகள் அந்தந்தப் பள்ளி நிர்வாகிகள் - தலைமையாசிரியர்கள் - ஆசிரியர்களால் வழங்கப்பட்டு, பிரார்த்தனையுடன் அவர்கள் தேர்வெழுத அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நடப்பாண்டு 12ஆம் வகுப்பு அரசுப் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் மொத்த எண்ணிக்கை: 562. இதில் -
=== மாணவர்கள் - 227
=== மாணவியர் - 335
பள்ளிக்கூடங்கள் வாரியாக மாணவர் எண்ணிக்கை விபரம்:
(1) அரசு மகளிர் மேனிலைப் பள்ளி - 154
(2) எல்.கே. மேனிலைப் பள்ளி - 125
(3) சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளி - 103
(4) சென்ட்ரல் மேனிலைப் பள்ளி – 74
(5) எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி – 39
(6) முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி - 36 (மாணவர் - 28, மாணவியர் - 8)
(7) சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி – 31
வழமை போல இவ்வாண்டும் - எல்.கே.மேனிலைப் பள்ளி, அரசு மகளிர் மேனிலைப் பள்ளி ஆகிய இரு தேர்வு மையங்களில் ப்ளஸ் 2 மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர்.
சென்ட்ரல் மேனிலைப் பள்ளி, எல்.கே.மேனிலைப் பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி ஆகிய 4 பள்ளிகளின் மாணவ-மாணவியர் எல்.கே.மேனிலைப் பள்ளி தேர்வு மையத்திலும்,
அரசு மகளிர் மேனிலைப் பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளின் மாணவியர் - அரசு மகளிர் மேனிலைப் பள்ளி தேர்வு மையத்திலும் தேர்வெழுதுகின்றனர்.
இன்று முதல் தேர்வெழுதச் செல்வதையொட்டி, அவரவர் பள்ளிகளில் மாணவர்கள் முற்கூட்டியே ஒன்றுகூட்டப்பட்டு - தேர்வறை ஒழுக்கங்கள், தேர்வு எழுதும் முறைகள் குறித்த வழிகாட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு, மாணவ-மாணவியர் வெற்றிக்காகவும், நற்சாதனைகளுக்காகவும் பிரார்த்தனையும் செ்யயப்பட்டது.
எல்.கே.மேனிலைப்பள்ளியில் இன்று காலையில் அறிவுரை வழங்கப்பட்டபோது...
இந்நிகழ்வில், பள்ளி தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை, துணைச் செயலாளர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகிகளும், தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களும் கலந்துகொண்டு, மாணவர்களை வாழ்த்தி - ஊக்கவுரை வழங்கியதோடு, பிரார்த்தித்து வழியனுப்பி வைத்தனர்.
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் இன்று காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளியின் நிறுவனர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், பொருளாளர் ஏ.கே.கலீல் ரஹ்மான், தாளாளர் & செயலாளர் ஹாஃபிழ் ஏ.எல்.முஹம்மத் ஷம்சுத்தீன், துணைச் செயலாளர் கே.எம்.டீ.சுலைமான், இயக்குநர் ஆர்.ரத்தின சாமி, முதலவர் டி.ஸ்டீபன், தலைமை ஆசிரியை சிரோன்மணி ஜெயமுருகன், ஆசிரியர் ஏ.எச்.முஹம்மத் அபூபக்கர் மிஸ்கீன் ஸாஹிப், மேலாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, பிரார்த்தித்து வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் 10, 11, 12ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களின் ஏற்பாட்டில் 11.02.2017. சனிகிழமையன்று கூட்டு இறைப் பிரார்த்தனை பள்ளி வளாகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்களுள் உதவி:
A.S.புகாரீ (எல்.கே.மேனிலைப் பள்ளி)
A.R.ஷேக் முஹம்மத் (முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி)
|