காயல்பட்டினம் 01ஆவது வார்டு கோமான் தெருவில் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, அப்பகுதியில், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் - சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் தலைமையில், வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோமான் தெருக்களில் தேங்கியிருக்கும் குப்பைகளை முற்றிலுமாக அகற்றல், வீடு வீடாகச் சென்று - அங்கு தண்ணீர் திறந்த நிலையில் தேங்கி - லார்வா கொசுப் புழுக்கள் உருவாகும் வகையில் கிடந்த தேவையற்ற பொருட்களை அகற்றி அப்புறப்படுத்தல், அனைத்து வீடுகளிலும் கொசு வராமல் தடுப்பதற்காக புகையடித்தல் ஆகிய பணிகள், நேற்று (03.03.2017. வெள்ளிக்கிழமை) நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
|