ஐக்கிய அரபு அமீரக அஸ்ஹர் ஜமாஅத்தின் விரிவான பொதுக்குழுக் கூட்டம், 17.03.2017. வெள்ளிக்கிழமையன்று, மதிய உணவு - மார்க்க வினாடி-வினா போட்டிகளுடன் நடைபெறவுள்ளது. இதுகுறித்த தகவலறிக்கை:-
கடந்த 27.01.2017. அன்று, ஐக்கிய அரபு அமீரக அஸ்ஹர் ஜமாஅத் தலைவர் விளக்கு தாவூத் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, அமீரக அஸ்ஹர் ஜமாஅத்தின் விரிவான பொதுக்குழுக் கூட்டம், இன்ஷாஅல்லாஹ், வரும் 17.03.2017. வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், துபை அல்தவார் பூங்காவில் மதிய உணவு விருந்துபசரிப்புடன் துவங்கவுள்ளது.
ஆண்கள், பெண்கள், மழலையருக்கு தனித்தனியே மார்க்க வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு, கண்கவர் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இதன்போது, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் & அதன் துணை அமைப்புகளது வளர்ச்சி & மேம்பாடு குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றங்கள், கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டு, முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
அஸ்ர் தொழுகைக்குப் பின், தேனீர் - சிற்றுண்டி உபசரிப்புடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்ஷாஅல்லாஹ் நிறைவுறும்.
இந்நிகழ்வில், ஜமாஅத்தின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் இதையே அழைப்பாக ஏற்று, தவறாமல் குறித்த நேரத்தில் வந்து கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சியில் பங்கேற்க வருவோர் பின்வருமாறு அவரவர் பகுதிகளின் பொறுப்பாளர்களை முற்கூட்டியே தொடர்புகொண்டு, தமது வருகையை உறுதி செய்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்:-
அபூதபீயிலிருந்து வருவோர்
(1) ஜனாப் மக்பூல் - 050 690 4600,
(2) ஜனாப் ‘துணி’ உமர் அன்ஸாரீ - 055 910 0909
(3) ஜனாப் இஸ்மாஈல் - 050 293 3778
ஆகியோருள் ஒருவரைத் தொடர்புகொள்க!
துபை, ஷார்ஜா, அஜ்மான் உட்பட அமீரகத்தின் இதர பகுதிகளிலிருந்து வருவோர்,
(1) ஜனாப் இர்ஃபான் – 055 197 0044,
(2) ஜனாப் ஃபிர்தவ்ஸ் – 052 649 1992,
(3) ஜனாப் கே.எஸ்.முஹம்மத் யூனுஸ் - 055 750 1471
ஆகியோருள் ஒருவரைத் தொடர்புகொள்க!
சொந்த வாகனம் இல்லாதோர், துபை Airport Free Zone Metro Station வந்தால், அதன் அருகிலேயே நிகழ்விடம் உள்ளது என்பதை அறிக.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஐக்கிய அரபு அமீரகம் - துபையிலிருந்து...
K.S.முஹம்மத் யூனுஸ் |