ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் கடந்த 10-02-2017,வெள்ளிக்கிழமையன்று எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியால் மிகவும் உற்சாகமாக நடைபெற்ற ஐம்பெரு விழாவில், இந்த 2-ஆண்டுகளுக்கான (2017 மற்றும் 2018) 08-வது அமர்விற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்களின் முழுவிபரம் கீழ்வருமாறு:-
நமது மன்றத்தின் அடுத்த 101-வது செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 17-03-2017, வெள்ளிக்கிழமை மாலை மஃரீப் தொழுகைக்கு பின்னர் வழமையான ஜித்தா, ஷரபிய்யா இம்பாலா கார்டன் உணவகத்தின் உள்ளரங்கில் வைத்து நடைபெறும். அனைவரும் தங்களுக்கு அல்லாஹுவால் வழங்கப்பட்டுள்ள, இந்த அமானிதத்தை பொறுப்புடன் பேணி இக்கூட்டத்தில் தவறாது கலந்து நாமும், நம்மக்களும் மேலும் நம் காயல் மண்ணும் பயனுற பங்களிப்பு செய்திட அன்புடன் வேண்டுகிறோம்.
வல்லோன் அல்லாஹ் எங்களின் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் தன்னலமற்ற பொதுநலச் சேவைதனை அங்கீகரித்து
நமது காயல் மண்ணையும் மக்களையும் செழிப்பாக்கி வைத்து
நலமுடனும் வளமுடனும் வாழ, பேரருளும் பெருங்கிருபையும்
செய்வானகவும் ஆமீன். வாழ்த்துக்கள்.....
தகவல் :
சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
செயலாளர்,
காயல் நற்பணி மன்றம். ஜித்தா,
03-03-2017
|