தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து, பெரும்பாலும் மாநிலம் முழுக்க தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. காயல்பட்டினத்தில் மாதம் ஒருமுறை கூட குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலை பெரும்பாலான பகுதிகளில் உள்ளது.
இதற்கிடையே, காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலை உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகளுக்குத் தங்குதடையின்றி தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதைக் கண்டித்து, சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - SDPI சார்பில் சாலை மறியல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் DCW மற்றும் ஸ்டெர்லைட் உள்ளிட்ட தனியார் ஆலைகளுக்கு தண்ணீர் எடுத்து செல்வதை கண்டித்து முற்றுகை மற்றும் சாலைமறியல் போராட்டம் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெருகிவரும் #குடிதண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவமழை எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு கிடைக்காததால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீரின் அளவு குறைந்ததுகொண்டே இருக்கிறது.
இந்த அபாயகரமான சூழ்நிலையில் 11/01/2017 புதன்கிழமை அன்று #தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் DCW மற்றும் ஸ்டொர்லைட் உட்பட இருபத்தி ஜந்திற்கும் மேற்பட்ட தனியார் ஆலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. .
இதனை மாவட்ட நிர்வாகம் நிரந்தர தடையாக செயல்படுத்த வேண்டும்.. பொதுமக்களுக்கு தடையில்லா #குடிதண்ணீர் வழங்குவதை உருதிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் SDPI #கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறும் வகையில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் டேங்கர் லாரி மூலம் தனியார் ஆலைகளுக்கு எடுத்துச்செல்லும் நடவடிக்கையை கண்டித்தும் 28/02/2017 செவ்வாய்கிழமை அன்று ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார கிராமங்களின் உள்ள பொதுமக்கள் SDPI கட்சியுடன் இணைந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த மறியல் போராட்டம் தூத்துக்குடி மாவட்டம் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் ஷேக் அஸ்ரப் அலி ஃபைஜி மற்றும் மாவட்ட துணை தலைவர் முஹம்மது அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள முன்னாள் கிராம / பஞ்சாயத்து தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உள்பட 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர..
மக்களுக்காக என்றும் சுயநலமற்ற களப்போராட்டங்களை முன்னின்று செயல்படும் ஆற்றல் மிக்க #DPI கட்சியின் செயல்வீரர்களோடு இணைந்து இந்த போராட்டம் நடைபெற்றது..
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
H.ஷம்சுத்தீன்
(மாவட்ட பொதுச் செயலாளர், SDPI, தூத்துக்குடி மாவட்டம்)
|