தமிழகத்தில் ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகள் இன்று துவங்கின. தேர்வுகள் முடிவடையும் வரை – இடையிடையே வெள்ளிக்கிழமைகளிலும் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு, அந்நாட்களில் காயல்பட்டினம் நகர ஜும்ஆ பள்ளிகளில் தொழுகை நேரங்கள் சில நிமிடங்கள் பிற்படுத்தப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சிறிய குத்பா பள்ளியில் தமிழ் உரை 12.35 மணிக்கும், குத்பா 13.20 மணிக்கும், தொழுகை 13.30 மணிக்கும் நடைபெறும் என - சிறிய, பெரிய குத்பா பள்ளிகளின் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளியில், 12.45 மணிக்கு குத்பா உரையும், 13.30 மணிக்கு தொழுகையும் நடைபெறும் என அப்பள்ளி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகுதூம் ஜும்ஆ பள்ளியில், தமிழ் உரை 12.35 மணிக்கும், முதல் அதான் 13.15 மணிக்கும், தொடர்ந்து தொழுகையும் நடைபெறும் என அப்பள்ளி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வகிக்கும் ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில், 12.45 மணிக்கு குத்பா உரையும், 13.15 மணிக்கு தொழுகையும் நடைபெறும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியில், 13.15 மணிக்கு குத்பாவும், 13.30 மணிக்கு தொழுகையும் நடைபெறும் என அப்பள்ளி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களுள் உதவி:
வாவு S.காதிர் ஸாஹிப் & Z.A.ஷெய்க் அப்துல் காதிர்
(செயலர், சிறிய - பெரிய குத்பா பள்ளிகள்)
M.A.அப்துல் ஜப்பார்
(அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித்)
A.R.முஹம்மத் இக்பால்
(மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித்)
ஷம்சுத்தீன்
(ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளி - TNTJ)
‘ஜுவெல் ஜங்ஷன்’ K.அப்துர்ரஹ்மான்
(பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளி) |