காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய பேருந்துகள் - காயல்பட்டினம் வழியை புறக்கணித்து செல்வது சம்பந்தமாக கடந்த ஜூன் மாதம் முதல் - நடப்பது என்ன? குழுமம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய பேருந்தில் ஏறியப்பிறகு - அப்பேருந்தின் நடத்துனர் / ஓட்டுநர், இவ்வண்டி - காயல்பட்டினம் செல்லாது என தவறாக கூறும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.
இது சம்பந்தமாக புகார்கள் பெறப்படும்போது எல்லாம் - அப்புகார்களை, டிக்கெட் ஆதாரங்களோடு - சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடப்பது என்ன? குழுமம் அனுப்பி வந்துள்ளது. அதன் அடிப்படையில், சில ஓட்டுனர்கள்/நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த புகார்களை எளிதாக பொது மக்கள் பதிவு செய்யும் நோக்கில், நடப்பது என்ன? குழுமம் - தற்போது நிலையான புகார் கடிதத்தை (STANDARD COMPLAINT LETTER) தயாரித்துள்ளது. அதனை நிரப்பி - பொது மக்கள் நேரடியாகவோ, நடப்பது என்ன? குழுமம் மூலமாகவோ, சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பலாம்.
அப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்
இப்படிவத்தை (PDF), இலவசமாக கீழ்க்காணும் இடங்களிலும் பெறலாம்.
(1) நடப்பது என்ன? பதிவு அலுவலகம் (தைக்கா பஜார்)
(2) நடப்பது என்ன? நிர்வாக அலுவலகம் (துஃபைல் வணிக வளாகம்)
(3) BRIGHT WORLD MOBILE SHOP (துஃபைல் வணிக வளாகம்)
(4) ஸ்டார் ரெடிமெட்ஸ் (தபால் நிலையம் எதிரில்)
(5) முஹம்மது ஹஜ் டிராவல்ஸ் (அ.க. காம்ப்ளெக்ஸ்)
(6) பதுரியா ஹோட்டல் (கூலக்கடை பஜார்)
(7) மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி
(8) யுனைடெட் கார்ட்ஸ் (பாஸ் காம்ப்ளெக்ஸ்)
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 6:30 pm / 2-2-2017] |