காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் 26ஆம் ஆண்டு விழா, 26.02.2017. ஞாயிற்றுக்கிழமையன்று - வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் வாவு எம்.எம்.முஃதஸிம் தலைமை தாங்கினார். வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனரும் - காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவருமான வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், பிரமுகர்களான வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார், எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, ஜெஸ்மின் கலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் ஆங்கில ஆசிரியை இ.ஆரோக்கிய ஜெமீலா வரவேற்றார். தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி பள்ளியின் ஆண்டறிக்கையை தமிழிலும், ஆங்கில ஆசிரியை ஆர்.செல்வ நங்கை ஆங்கிலத்திலும் வாசித்தனர்.
கடந்த கல்வியாண்டில் 10ஆம் - 12ஆம் வகுப்புகளில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவியருக்கும், பாடங்களில் 100 சதவிகித தேர்ச்சிக்கு வித்திட்ட ஆசிரியையருக்கும் இவ்விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெ.எல்லோரா பரிசுகளை வழங்கி, வாழ்த்துரையாற்றினார்.
பள்ளி மாணவ-மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, ஆங்கில ஆசிரியை எஸ்.மரிய ஜெனிட்ட நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், பள்ளி மாணவ-மாணவியரின் பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|