காயல்பட்டினம் தைக்கா தெரு அருகில் செயல்புரிந்து வந்த ஊராட்சி ஒன்றிய பள்ளி (தைக்கா ஸ்கூல்), தற்போது - சிவன் கோவில் தெரு அருகில், புதிய கட்டிடத்தில் - நடுப்பள்ளி என தரம் உயர்த்தப்பட்டு, செயல்புரிந்து வருகிறது.
தற்போது காலியாக உள்ள பழைய கட்டிடம், பாழடைந்த நிலையில், குப்பைகள் நிறைந்து சுகாதாரக்கேடு விளைவிக்கும் வகையிலும், சமூக விரோத செயல்களுக்கு கூடாரமாகவும் அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, எந்நேரமும் விழுந்திடும் நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை முற்றிலும் அகற்றிட - அப்பகுதியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் கையெழுத்து - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - பெறப்பட்டது.
பெறப்பட்ட கையெழுத்துக்கள் , புகைப்படங்களுடன் இது சம்பந்தமான விரிவான மனு இணைக்கப்பட்டு, இன்று சென்னையில், தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவு, கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன், கல்வித்துறை அரசு முதன்மை செயலர் திருமதி டி.சபிதா IAS, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலர் திரு ஹன்ஸ்ராஜ் வர்மா IAS, ஆரம்ப கல்வித்துறையின் இயக்குனர் திரு ஆர். இளங்கோவன் ஆகியோரிடம் நடப்பது என்ன? சமூக ஊடகக்குழும நிர்வாகிகளால் - வழங்கப்பட்டன.
|