காயல்பட்டினம் நகருக்கு 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாம் குடிநீர் திட்டம் அமல் செய்யப்பட்டு வருகிறது. நகரில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து கடந்த மாதம், நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் - மாவட்ட ஆட்சியர் திரு ம.ரவிக்குமார் IAS யை நேரடியாக சந்தித்து மனு வழங்கினர். அவ்வேளையில் - இரண்டாம் குடிநீர் திட்டம், பிப்ரவரி மாதம் - காயல்பட்டினத்தில், நடைமுறைக்கு வரும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
முடியும் தருவாயில் உள்ள இக்குடிநீர் திட்டத்திற்கான வெள்ளோட்டம் - பிப்ரவரி 27 க்கு முன்பு நடைபெறும் என்றும், தான் அப்பணிகளை கண்காணித்து வருவதாகவும் - நடப்பது என்ன? குழுமத்திற்கு மாவட்ட ஆட்சியர் இன்று தகவல் வழங்கியுள்ளார். மேலும் - மார்ச் மாதத்தில் இருந்து, நகரில் குடிநீர் பிரச்சனை இருக்காது என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
|