சில்வர் ஜோன் நிறுவனத்தால் நடத்தப்படும் புகழ்பெற்ற ஒலிம்பியாட்ஸ் கல்வித் திறனாய்வுத் தேர்வில், விஸ்டம் பப்ளிக் பள்ளி மாணவ-மாணவியர் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். இதுகுறித்து, அப்பள்ளியின் அறங்காவலர் எஸ்.ஐ.புகாரீ தந்துள்ள செய்தியறிக்கை:-
வருடந்தோறும் சில்வர் ஜோன் நிறுவனத்தால் (SILVER ZONE FOUNDATION) நடத்தப்பட்டு வரும் மிகப் பிரபலமான ஒலிம்பியாட்ஸ் (OLYMPIADS)
2016-2017 ஆண்டிற்கான கல்வித் திறனாய்வுத் தேர்வில் விஸ்டம் பப்ளிக் பள்ளி மாணவ மாணவியர் பலர் தங்கப் பதக்கங்களை வென்றனர் .
சென்ற வருடம் 2016 நவம்பர் 16 ந் தேதி துவங்கிய ஒலிம்பியாட்ஸ் தேர்வுகள் டிசம்பர் 20 ந் தேதி வரை நடை பெற்றது.
வருடந்தோறும் சர்வதேசஅளவில் நடத்தப்பட்டு வரும் இத் திறனாய்வுத் தேர்வில் பல்வேறு நாடுகளின் 9000 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல் போன்ற பல்வேறு பாடப் பிரிவுகளின் கீழ் தேர்வுகளில் பங்கெடுத்துக் கொள்வது இதன் சிறப்பம்சமாகும்.
மேலும் பள்ளியின் IV STD மாணவி A .M. நபீஸா, ஒலிம்பியாட்ஸ் தர வரிசைப் பட்டியலில் 262 வது இடத்தைப பெற்று 2 ஆம் சுற்றுக்குத் தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கணிதப் பிரிவில் பதக்கம் வென்றவர்கள் :
1. M.A.K. முஃமினா முஸ்லிம் . I STD -- - தங்கப்பதக்கம்
2. M.H. பாரூக்குல் இஸ்லாம் .II STD --- .தங்கப்பதக்கம்
3. M.A.K. முஹம்மத் அமானுல்லாஹ் .II STD---வெள்ளிப் பதக்கம்
4. M.A.K. ஷாஹுல் ஹமீத் ரிஸ்வி . II STD---- வெண்கலப் பதக்கம்
ஆங்கில மொழிப் பிரிவில் பதக்கம் வென்றவர்கள் :
1. M.A.K. முஃமினா முஸ்லிம் . I STD -- - தங்கப்பதக்கம்
2. M.H .பாரூக்குல் இஸ்லாம் .II STD --- .தங்கப்பதக்கம்
3. A.K.R. முஹம்மத் யூஸுப் . III STD --- தங்கப்பதக்கம்
4. A .M .நபீஸா IV STD --- தங்கப்பதக்கம்
5. S .I .பாத்திமா அப்Fரா V STD --- தங்கப்பதக்கம்
6. S.I . ஆயிஷா நிதா VI STD --- தங்கப்பதக்கம்
7. A.B. ஹபீபா மூவபிக்கா II STD ----வெள்ளிப் பதக்கம்
8. K.N. சுலைஹா ரிகாஷா IV STD----வெள்ளிப் பதக்கம்
9. S. ருமானா II STD ----- வெண்கலப் பதக்கம்
அறிவியல் பிரிவில் பதக்கம் வென்றவர்கள் :
1. A .M . நபீஸா IV STD --- தங்கப்பதக்கம்
2. M .A .சித்தி பல்கீஸ் V STD ---தங்கப்பதக்கம்
3. M .A .பரீதா VI STD----தங்கப்பதக்கம்
4. A .N . நஹ்லா VIII STD---தங்கப்பதக்கம்
5. S.I . ஆயிஷா நிதா VI STD -----வெள்ளிப் பதக்கம்
6. R .S. கதீஜா நஜ்லா VIII STD ----வெள்ளிப் பதக்கம்
7. S .M .F . கதீஜா மப்ரூஹா VIII STD----வெண்கலப் பதக்கம்
பதக்கம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த அனைத்து சாதனை மாணவ,மாணவியரையும் பள்ளி நிர்வாகிகள், முதல்வர் ,மற்றும் ஆசிரியைகள் அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|