காயல்பட்டினம் பப்பரப்பள்ளி பகுதியில் பல ஆண்டுகளாக நகராட்சியில் சேரும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி, அப்பகுதி மக்களின் சார்பாக எஸ்.ஏ.கே. ஷேக் தாவூத் ("மாஷா அல்லாஹ்" தாவூத்) பெயரில் வழக்கு ஒன்று, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளையில் - தொடரப்பட்டது (வழக்கு எண் 221/2016[SZ]).
இவ்வழக்கின் முந்தைய விசாரணை - ஜனவரி 31 அன்று நடந்தது. பிப்ரவரி 23 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஜனவரி 31 அன்று, தற்போது குப்பைகள் கொட்டப்படும் இடம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என நகராட்சிக்கு தீர்ப்பாயம்உ த்தரவிட்டிருந்தது. அதன்படி - நகராட்சி சார்பில், வழக்கறிஞர் வித்யாலட்சுமி விபின் இன்று மனு தாக்கல் செய்தார்.
வழக்கின் இதர மனுதாரர்களான அரசு தரப்புகள், நகராட்சியின் பதில்களே - தங்கள் பதிலாக எடுத்துக்கொள்ள தீர்ப்பாயத்தை கோரினர்.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் - பதில் தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டது.
எதிர்தரப்பினரின் மனுக்களை பார்வையிட்டு - விரும்பினால் - மனுதாரர், பதில் தாக்கல் (REJOINDER) செய்யலாம் எனக்கூறி, வழக்கினை ஏப்ரல் 12 தேதிக்கு, நீதிபதி எம்.எஸ். நம்பியார் ஒத்திவைத்தார்.
பிப்ரவரி 23, 2017 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணை
ஜனவரி 31, 2017 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணை
ஜனவரி 17, 2017 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணை
டிசம்பர் 13, 2016 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணை
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 7-3-2017; 6:00pm] |