04.03.2016. சனிக்கிழமையன்று அய்யா வைகுண்டசாமி பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம் அய்யா வைகுண்டசாமி வழிபாட்டுத் தலங்களில் அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழா ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 20ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, 04.03.2017. அன்று சனிக்கிழமை என்பதால், அந்நாளில் - தூத்துக்குடி மாவட்டத்தில் பணி நாளாக இயங்கும் கல்வி நிறுவனங்கள், சுகாதாரத் துறை, மின் வாரியம் மற்றும் அரசின் இதுபோன்ற இதர அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும், 03.03.2016. அன்று அரசுத் தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ / மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி (Negotiable Instrument Act) பொது விடுமுறை நாளல்ல என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்குப் பகரமாக, 11.03.2017. இரண்டாம் சனிக்கிழமையன்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
|