துாத்துக்குடி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (பிப்ரவரி 25) நண்பகல் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. பிப்ரவரி மாத கூட்டம் 25.02.2017 நண்பகல் 12.30 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்துக் கொள்ள உள்ளனர். எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றனர். எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளித்திடலாம்.
இதில் பொதுமக்களும், நுகர்வோர்களும் பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெப்பாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, கேஸ் சிலிண்டர் மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் இக்கூட்டத்தில் எடுத்துரைத்து தீர்வு காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
tutyonline.com
|