அரசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, இனி விருப்ப அடிப்படையில் 5 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு - நுகர்வோரின் விருப்பத்தைக் கேட்டு, நியாய விலைக் கடைகளில் இருக்கக் கூடிய கோதுமை இருப்பின் அளவைப் பொருத்து, மாவட்ட தலைமையிடத்தில் 10 கிலோவுக்கு மிகாமலும், இதர பகுதிகளில் 5 கிலோவுக்கு மிகாமலும் விலையில்லாமல் கோதுமை வழங்கப்படவுள்ளது. கோதுமை வழங்கும் அளவுக்கு அரிசி குறைத்து வழங்கப்படும்.
உதாரணமாக, 5 நபர்களைக் கொண்ட ஒரு குடும்ப அட்டைதாரருக்கு, 25 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதில், மாவட்ட தலைமையிடத்தில் வசிப்பவர்களுக்கு 15 கிலோ அரிசி & 10 கிலோ கோதுமையும், இதர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 20 கிலோ அரிசி & 5 கிலோ கோதுமையும் விலையில்லாமல் வழங்கப்படும்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
|