காயல்பட்டினம் நகராட்சியில் தற்போது இரண்டாம் குடிநீர் திட்டம் - 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சியில் இருந்து நகருக்கு குடிநீர் கொண்டுவரப்படவுள்ளது.
பொன்னங்குறிச்சியில் இருந்து, காயல்பட்டினம் வரை - சுமார் 27 கிலோமீட்டர் தூரத்திற்கு போடப்படவேண்டிய குழாய்கள் - தற்போது போடப்பட்டுவிட்டன.
உள்ளூரில் போடப்படவேண்டிய குழாய்கள் இன்னும் முழுமையாக போடப்படவில்லை. இருப்பினும், தற்போதைய குடிநீர் பஞ்சத்தை கருத்தில் கொண்டு, பொன்னங்குறிச்சியில் இருந்து பெறப்படும் தண்ணீர், பழைய இணைப்புகள் மூலமாகவே - புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறைவுறும் வரை - வழங்கப்படும் என தெரிகிறது.
இதற்கான வெள்ளோட்டம் நாளை (மார்ச் 1) காலை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் IAS - இன்றிரவு, நடப்பது என்ன? குழுமத்திடம் தெரிவித்தார்.
|