செய்தி: ப்ளஸ் 2 அரசுத் தேர்வுகள் இன்று துவங்கின! அறிவுரை - பிரார்த்தனையுடன் பள்ளி மாணவர்கள் தேர்வெழுத அனுப்பி வைக்கப்பட்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மனம் தளராமல் உற்சாகத்துடன் சென்று வாருங்கள் வென்று வாருங்கள் posted bymackie noohuthambi (colombo)[03 March 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45270
இழந்தது எல்லாம் திரும்ப தா இறைவா எனக் கேட்டேன்
இழந்தது எவை என இறைவன் கேட்டான்
பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்
பட்டியல் ஒன்றிட்டு சொல்லவா இயலும்
கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்
கோலம் மாறி அழகையும் இழந்தேன்
வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்
எதை என்று சொல்வேன் நான் இறைவன் கேட்கையில்
எதை எல்லாம் இழந்தேனோ அதை எல்லாம் மீண்டும் தா
என்றேன்
அழகாக சிரித்தான் இறைவன்
கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்
உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்
உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்
நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்
சொல்ல பல உண்டு இதுபோல்
தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான் இறைவன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross