செய்தி: நகராட்சி தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கை செயல்பட விடாமல் முடக்கிய ஆணையர், பொறியாளரை கூண்டோடு மாற்றினோம்! முறைமன்ற நடுவர் சோ.அய்யர் IAS ‘தி இந்து’ நாளிதழுக்கு பேட்டி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...செத்த பெண்ணுக்கு ஜாதகம் பார்க்காதீர்கள் posted bymackie noohuthambi (colombo)[08 March 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45322
செத்த பெண்ணுக்கு ஜாதகம் பார்க்காதீர்கள் என்று ஒரு பழமொழி கேள்விப் பட்டிருக்கிறீர்களா....நடந்து முடிந்த நகராட்சி 5 வருட காலங்கள் செயல்படாமல் போனதற்கான காரண காரியங்களை போஸ்ட் மோர்டெம் பண்ணுவதில் அர்த்தம் இல்லை .
நடப்பதென்ன என்று ஒரு குழுமம் நகர்நல மன்றம் என்று ஒரு குழுமம் இவை இரண்டும் ஊர் நன்மை பற்றி பேசுவதற்கு பதிலாக கடந்த காலங்களில் நடந்த கசாப்பான விஷயங்களை அசைபோட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு இருந்தால் எதிர் காலத்தில் ஊருக்கு செய்ய வேண்டிய நல்ல காரியங்களை செய்ய முடியாமல் போய்விடும்
யாரால் நடந்தது என்பதைவிடம் குறைகளை எப்படி எதிர்காலத்தில் சரி செய்ய முடியும் என்று யோசிப்பது பலனளிக்கும்.
மறதி ஒரு வசதி, அல்லாஹ் தந்துள்ள பெருங்கருணை.நமது குடும்பங்களில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து இப்போது அவர்களிடம் பகைமை பாராட்டுவது இன்னும் நமதூரில் இருக்கிறது. அறிவியல் முன்னேற்றங்கள் எவ்வளவோ இருந்தும் நாம் இன்னும் பழைய பஞ்சாங்கங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நபிகள் நாயகம் அவர்கள் வழி முறையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால்தான் நமக்கு எல்லா விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும்.
அபூ ஜஹல் நபிகளாருக்கு தொல்லை கொடுத்தவர்களின் முதன்மையானவன். அவருடைய மகன் இக்ரிமாவும் அதற்கு சளைத்தவர் இல்லை. ஆனால் இக்ரிமா அவர்கள் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வந்து கொண்டிருக்கும்போது நபிகள் நாயகம் தனது தோழர்களை பார்த்து ஒன்றை சொன்னார்கள். இக்ரிமா அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்காக வந்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் அவர் செய்த தவறுகள் அவரது தந்தை அபூ ஜஹ்ல் செய்த இம்சைகள் இவற்றைப் பற்றி யாரும் வாய் திறந்து பேசிவிடாதீர்கள். அவரது உள்ளதை அது காயப் படுத்தி விடும் என்றார்கள். ஒரு நபி தோழர் எனது வேலையாள் அடிமையை ஒரு நாளைக்கு நான் எதனை முறை மன்னிக்க வேண்டும் என்று கேட்டபோது 70 முறை என்றார்கள். சில நபி தோழர்கள் செய்த தவறுகளுக்கு நபிகள் நாயகமே முன்வந்து மன்னிப்பு கேட்டார்கள் என்ற செய்திகளெல்லாம் புகாரி முஸ்லீம் திர்மிதி போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இவற்றை உலமாக்களும் நமக்கு சொல்லிக் காட்டுகிறார்கள். இருந்தாலும் அந்த நல்ல பண்புகளை நாம் ஏற்று நடப்பதற்கு தயாரில்லை.
''நபியே நீங்கள் சொல்லுங்கள்...நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள். அப்போது அல்லாஹ் உங்களை நேசிப்பான்'' என்ற திருமறை வசனம் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. நாம் அல்லாஹ்வை நேசிப்பதாக சொல்லிக் கொண்டாலும் உள்ளபடியே நேசித்தாலும் அது ஒரு பெரிய விஷயம் அல்ல. அல்லாஹ் நம்மை நேசிப்பது என்பது மிக பெரிய விஷயம். எனவே முஸ்லிம்களின் கண்ணியத்தை மற்றொரு முஸ்லீம் தாழ்த்தி பேசுவது செயல்படுவது எல்லாமே நபி வழிக்கு முரணானது .
திராவிட கழகத்திலிருந்து அண்ணா அவர்கள் பிரிந்து வந்து திராவிட முன்னேற்றக கழகம் ஆரம்பித்த போது அண்ணா சொன்னார்கள். திராவிட கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்து இந்த தமிழகத்து நன்மை செய்யும் என்றார்கள். இந்த அணுகுமுறையை நமது இளைஞர்களும் பின்பற்ற வேண்டும்.
ஊர் நன்மைக்காக எதிர் காலத்தில் என்ன செய்யலாம் என்று எல்லோரும் சிந்துத்து இணைந்து செயல்பட்டால் நல்லது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross