செய்தி: “பால்கனியில் நின்று கொண்டு தமிழக முதல்வராகிவிட சிலர் பகல் கனவு காண்கிறார்கள்!” திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முஸ்லிம்களுக்கு இவர்கள் என்ன செய்தார்கள் செய்வார்கள் ....... posted bymackie noohuthambi (colombo)[09 March 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45338
முதல்வராக எம்ஜியார் ஜெயலலையிதா வாழ்ந்த வரை எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் இப்படி பிரிந்து நிற்பவர்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
சசிகலாவை பொது செயலாளராக பன்னீர்செல்வம் அவர்களே முன்மொழிந்தார். முதல்வராக பன்னீர்செல்வமும் பொது செயலாளராக சசிகலாவும் இருந்திருந்தால் இன்னும் நாலரை ஆண்டுகள் இவர்கள் ஆட்சி தொடர்ந்திருக்கும். மக்களும் திருப்தியோடு இருந்திருப்பார்கள். இரட்டை இலையும் அதன் தன்மையை இழந்திருக்காது.
ஆசை யாரை விட்டது. சசிகலா முதல்வராக ஆசைப் பட்டார்,தினகரனை இழுத்து கட்சியின் பிடியை தனதாக்கிக் கொள்ள நினைத்தார். சமயம் பார்த்து பன்னேர்செல்வம் போர்க் கோடி தூக்கினார்.
திமுகவும் இந்த நாடகத்தை முன்பு நடத்திக் காட்டி இருக்கிறார்கள். சம்பத் கண்ணதாசன் பிரிந்தது, எம்ஜியார் பிரிந்தது எல்லாமே நடந்துதான் இருக்கிறது. இப்போது திமுகவின் கையும் சற்று வலுவிழந்து இருக்கிறது.
எத்தனை ஸ்டாலின்கள் வந்தாலும் ஒரு கலைஞர் ஆக முடியாது. எத்தனை சசிகலா வந்தாலும் ஒரு ஜெயலலிதாவாக முடியாது. மக்கள் மத்தியில் இரண்டு பேருக்கும் ஒரு நீங்காத இடம் உண்டு.
எனவே அடுத்த பொது தேர்தல் வந்தால்தான் மக்களின் உண்மை நிலை விளங்கும். மந்திரத்தால் மாங்காய் காய்க்காது.
6 மாதத்தில் திமுக ஆட்சி வரும் என்பதெல்லாம் பேசுவதற்கு கைதட்டுவதற்கு ரசிப்பதற்கு அழகாக இருக்கலாம். ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்படி ஆரூடம் செல்ல மாட்டார்கள். ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் இதை பேச மாட்டார்கள். இறை நம்பிக்கை இல்லாதவர்கள் எதையும் பேசுவார்கள்.
முஸ்லிம்களை பொறுத்தவரை இறைவன் யாரை ஆட்சியில் அமர்த்த நினைக்கிறானோ அவனே நாடாள்வான். அடுத்த சில நாட்களில் அவன் வேறு யாரையும் நினைத்தால் எந்த காரணமும் விளக்கமும் இல்லாமல் ஆட்சி மாறி விடும். எனவே மக்கள் மன்றத்துக்கு வருவோம் உங்கள் வாக்குகளை எங்களுக்கு அளித்து எங்களை வெற்றி பெற செய்யுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நல்ல காரியங்களை செய்வோம் என்பதை மட்டும் சொல்லுங்கள்.
லியோனி அவர்கள் பட்டிமன்றங்கள் கேட்பதற்கு பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். அரசியல் பேச்சுக்கள் ரசிக்காது முஸ்லிம்களை பொறுத்தவரை கருணாநிதியும் ஒன்றும் செய்து விடவில்லை, ஜெயலலிதாவும் ஒன்றும் செய்து விடவில்லை. கோவை சிறைச்சாலையில் இருக்கும் முஸ்லிம்களை விடுவிக்க அவர்கள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. பேரறிவாளன் போன்றவர்களை விடுவிப்பதில் உள்ள அக்கறை கூட முஸ்லிம்கள் விஷயத்தில் இல்லை என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
முஸ்லிம்களின் தோள்களில் ஏறி இவர்கள் இருவரும் திருவிழா பார்க்கிறார்கள். எங்கள் தோள்கள் வலிக்கின்றன. நீங்கள் உயர்ந்து நிற்பதை காட்டுவதற்காக எங்கள் தோள்களை பயன்படுத்துகிறீர்கள் என்பதாக எங்கிருந்தோ ஒரு குரல் வருகிறது. அதையும் காது கொடுத்துக் கேளுங்கள்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross