செய்தி: காயல்பட்டினத்தில் நடந்த குடும்ப அட்டைகள் குறைதீர் முகாமில் சுமார் 1000 பேர் பயனடைந்தனர்! அருகாமை ஊர்களில் இருந்தும் திரளாக மக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உங்களின் தூய தொண்டினை தொடர்ந்திடுவீர்களாக!.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[12 March 2017] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45342
மாஷா அல்லாஹ்! ஏழை எளியவர்களுக்கும்,சாமானிய மக்களுக்கும் ,நடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகவும் பயன்படும் ஒரு வாழ்க்கை தேவை ஆவணமாக ரேஷன் அட்டையை பெறுதல் மற்றும் அதன் தடை க்குறிய சிரமங்களை தீர்த்துவைப்பதோடு,பெயர் மாற்றம், சேர்த்தல் போன்ற அனைத்து சிரமங்களுக்கும் ஒரு வடிகாலாக இந்த முகாம் நமதூரில் நடைபெற்றிருக்கிறது! அஹமத்துலில்லாஹ்!
இது நமது திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள ஊர்களில் நமது ஊரை தேர்நதெடுத்த நமது மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், வட்டார அதிகாரிகளுக்கும் முதற்கண் நமதூர் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்!
அதிலும்,நமதூரின் மக்கள்நலனே நம் நலன் என்று பொதுநல நல்லிதையத்தோடு இயங்கும் "நடப்பதென்ன"வாட்ஸப் குழுமத்தை அணுகி இந்த முகாமை நடத்தி தாருங்கள், நீங்கள் தான் இதற்கு பொருத்தமானவர்கள் என்பதை அடையாளம் கண்ட அதிகாரிகளின் முடிவை எண்ணி அகம் மகிழ்கின்றேன்!
"நடப்பதென்ன"குழுமம் நடுத்துவதா, கூடாது,கூடாது என்ற கொப்பளிக்கும் காழ்ப்புணர்ச்சி எண்ணத்தில், மாவட்ட ஆட்சித்தவர் உட்பட ,வட்டார அதிகாரிகள்வரை அனைவரையும் சந்தித்து தங்கள் பொறாமை தீயை பற்றவைத்து, நடப்பதென்ன குழுமம் நடத்தக்கூடாது, எப்படியாவது நாம் எடுத்து நடத்தியாகவேண்டும் என்ற வெறியுணர்வை காட்டி இருப்பதாக கேள்வி.
மாவட்ட ஆட்சித்தலைவராக இருக்கட்டும்,வட்டார அதிகாரிகளாக இருக்கட்டும் அவர்களெல்லாம் எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர்கள், இப்படிப்பட்ட தீய எண்ணமுடைய வர்களை எல்லாக்காலங்களிலும் சந்த்தித்து வருபவர்கள் அல்லவா? இவர்களின் எண்ணத்தயறிந்தவர்களாக இடத்தை காலிபண்ணுங்கள் என்ற ஏகவசனத்தில் துரத்தியடித்துள்ளதாக கேள்வி!
நேற்றய முகாமில் ஆயிரம் பேர்கள் பயனடைந்ததாக தகவல் வந்திருக்கிறது,நமதூர் மக்களும் மற்றும் வட்டாரமக்களும் பயனடைந்து இந்த "நடைப்பெதென்ன"குழுமத்தை வாயார,மனதார பாராட்டி சென்றதாக தகவலும் வந்தது!
வந்தவர்களை நல்ல முறையில் அணுகி அவர்குக்குறிய வேலைகளை துரிதமாக முடித்து கொடுத்ததோடு அவர்கள் மனம் குளிர குளிர்பானமும் வழங்கிய "நடப்பெதென்ன குமத்திற்கும்' அந்த இடத்தை அன்புள்ளத்துடன் வழங்கிய ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்திற்கும்,அந்த முகாமில் பணியாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும் காயல் மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்!
நடைப்பெதென்ன குழும கொள்கை குன்றுகளே, குறைமதியானர்களின் கூக்குரலுக்கு செவிசாய்க்காமல்,உங்கள் சீரிய,செம்யாயான பணிகளின் பயணத்தை தொடர்ந்திடுவீர்,
உங்களின்உள்ள சுத்தியான தூயப்பணிக்குறிய கூலியை எல்லாம் வல்ல அல்லாஹ் எப்பொழுதும் வழங்கியருள்வானாக, ஆமீன்! மேலும் உங்கள் மூலம் பயனடைந்த ஏழை எளிய மக்கள் முதல் அனைத்து காயல் நடுநிலை நெஞ்சங்களின் துவாவும் உங்களை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross