Re:... posted byMirshadhunnisa (Adiyakkamangalam,thiruvarur)[17 March 2017] IP: 117.*.*.* India | Comment Reference Number: 45352
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
சமூகத்தின் மீதான கவலை மற்றும் அக்கறை பொதிந்த பதிவு,மா ஷா அல்லாஹ்.
சட்டத்தின் படி செயல்படவேண்டிய சட்டமன்றமும்,அதை உறுதி செய்யவேண்டிய நீதிமன்றமும் பொறுப்பை தவற விடுகின்றன.
படிக்கும் கல்வி முதல் பக்கத்தில் வாழும் பருவ,நடுத்தர,முதிர்ந்த ஆணானாலும்,பெண்ணானாலும் வழிமாறி செல்வதின் விளைவின் பலனை எல்லோருமாய் சேர்ந்து அனுபவிக்க நேருகிறது.
இன்றைய இந்திய குற்றவியல் சட்டத்தின் சந்து பொந்துகளால் இதை சரிசெய்யவும் முடியாது.
இதற்கு ஒரே தீர்வு,சமுதாயத்தில் நிகழும் ஒழுக்கச்சீர்கேட்டை களைய அந்நூர் அத்தியாயத்தில் இது சம்பந்தமாக வந்துள்ள சட்டங்களை அரசு ஏற்று சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும்.செய்வார்களா?
அவர்கள் அந்நூர் ஸூராவின் 1-26 வசனங்களில் இது சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கு செயல்வடிவம் அளிக்கமாட்டார்கள்.
எனவே,
ஒழுக்கச்சீர்கேடுகளுக்கு சாவுமணி அடிக்கவும், நிகழாமல் தடுக்கவும் அந்த ஸூராவின் மீதமுள்ள (27-64)வசனங்களில் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை தற்காத்துக்கொள்ள தேவையான தெளிவான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.நாம் அவற்றை பின்பற்ற வேண்டும். நம் பிள்ளைகள் ஆணாயினும் பெண்ணாயினும் அவ்வாறு வாழ சொல்லித்தர வேண்டும்.
மதவேறுபாடின்றி,மக்கள் இந்த சீரிய வழிகாட்டல்களை எடுத்துக்கொண்டால், பலன் அவர்களுக்கு கிடைக்கும்.இல்லையெனில் கயவர்களின் கையே ஒங்கும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross