Re:...நல்லதொரு முயற்சி posted bymackie noohuthambi (colombo)[18 March 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45360
அல்ஹம்து லில்லாஹ். நல்லதொரு முயற்சி. காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவையின் முயற்சிக்கு ஊரில் உள்ள எல்லா தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்ற கோரிக்கை மிக நியாயமானது. காலத்தின் கட்டாயம்
இப்படி ஒரு தொழுகை இடம் கடலோரத்தில் அமைவது. மாற்று மத சகோதரர்கள் வழிபாட்டு தலங்களை அமைத்து வரும் செய்திகள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த செய்தி மனதுக்கு இதமளிக்கிறது. உடலால் பொருளால் உதவி செயபவர்கள் நிறைய இருந்தாலும் இதற்கென நேரத்தை ஒதுக்கி வேலை பார்ப்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல. அதற்கு ஒரு தியாக உணர்வு அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும்.அல்லாஹ் இந்த நல்ல காரியத்தில் ஈடுபட்டுள்ள எல்லா நல்ல உள்ளங்களுக்கும் அருள் புரிவானாக. அவர்களின் உடல்நிலைகளில் மனவலிமைகளில் பொருளாதார பின்னணிகளில் பரக்கத்தை ஏற்படுத்துவானாக.
இன்று பேருவளை என்ற மாணிக்க நகரிலிருந்து கொழும்புக்கு ரயிலில் வந்து கொண்டிருந்த போது ஒரு பெரிய மனிதருடன் பேசிக் கொண்டு வந்தேன். அவர் காயல்பட்டினம் மக்களை பெரியோர்களை பற்றி மிக சிறப்பாக பேசிக் கொண்டு வந்தார்கள். காயல்பட்டினம் மக்கள் இந்த நாட்டுக்கு வந்து தொழில் செய்தார்கள் என்பதைவிட இங்கு அவர்கள் வாழும் இடங்களிலெல்லாம் இறை இல்லங்களைத்தான் முதலில் அமைத்தார்கள். இன்று இந்த நாட்டில் செல்லுமிடமெல்லாம் பள்ளி வாசல்கள் ஓங்கி உயர்ந்து நிற்பதும் அதான் ஒலிகள் சிறப்பாக வானலையில் மிதந்து வருவதும் அப்படிப் பட்ட மனிதர்களால்தான் என்றார்கள். மிக பெருமையாக இருந்தது.
பூக்களும் கனிகளும் கண்ணுக்கு தெரிகின்றன ஆனால் அந்த பூக்களையும் கனிகளையும் நமக்கு வழங்கிய வேர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை என்ற நிதர்சன உண்மையை உணர்ந்தேன். எவ்வ்வித பலனும் எதிர்பாராது அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இறையில்லங்களை அமைத்த அந்த இறை இல்லக் கொடைவள்ளல்களை அல்லாஹ் கபூல் செய்வானாக அவர்களின் மண்ணறைகளை சுவர்க்க பூங்காவாக்கி வைப்பானாக. அதே உணர்வுடன் இப்போது இறை இல்லங்களை அமைக்கும் புதிய தலைமுறைக்கும் அல்லாஹ் அவனது மேலான கருணை மழையை பொழிவானாக.
எனக்குள்ள கவலை எல்லாம் நவீன கால முஸீபத் நம்மை எல்லாம் பிடித்துக் கொண்டு நம்மை பிரித்துக் கொண்டு நமது ஆளுமையை சோதனைக்குதாக்கி கொண்டிருக்கிறதே அதை பற்றிய பீதிதான். அந்த தொற்று நோய் என்னவென்பது நாமெல்லாம் அறிந்ததே. அந்த புற்று நோய் நம்மை இங்கும் தாக்கி விடாமல் நாம் நம்மை பாதுகாத்துக் கொண்டு முஸ்லிம்கள் என்ற ஒரே உணர்வுடன் வாழ வேண்டும்.
''எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள முஸ்லிம்கள் ஒன்றாகக் கண்டே...பொங்கு முஸ்லிம்களுக்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு'' என்று பாரதிதாசனின் பாடலை திருத்திப் பாடி நாம் ஒற்றுமையுடன் செயல்பட அல்லாஹ் தௌபீக் செய்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross