செய்தி: சென்ட்ரல் மேனிலைப் பள்ளியின் ஆசிரியர் அப்துல் காதர் கான் (கான் சார்) காலமானார்! மார்ச் 24 வெள்ளி அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நெஞ்சில் நிறைந்தவர்! posted byS.K.Salih (Kayalpatnam)[24 March 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45373
எனதன்பு ஆசிரியர் கான் சார் அவர்களின் வஃபாத் செய்தி என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.
எல்.கே.மேனிலைப் பள்ளியில் அறிவியல் பாடம் நடத்தியவர். அடித்துப் போட்டாலும் கணிதமோ - வேதியலோ சத்தியமாக மண்டையில் ஏறாத எனக்கு, அவர் நடத்தியபோது மட்டும் பாஸ் மார்க் வாங்கும் அளவுக்கு வேதியல் பாடம் மண்டையில் ஏறியது என்றால் அது மிகையாகாது.
படித்து முடித்த பின், சமூகப் பணிகளில் என்னைக் காணும்போதெல்லாம் - தான் ஓர் ஆசிரியர் என்ற எண்ணம் எதுவுமில்லாமல் - ஒரு நண்பன் போல என்னுடன் நெருங்கிப் பழகினார்.
தனது மகள்கள் இருவரின் கல்விச் சாதனைகள் உள்ளிட்ட குடும்ப விபரங்களைக் கூட மகிழ்ச்சியுடன் என்னிடம் பகிர்ந்திருக்கிறார்.
அடியேன் தொடர்பு வைத்துள்ள அமைப்புகளின் பொது நிகழ்ச்சிகளில் - “ஏடே... ஒரு ரெண்டு நிமிஷம் வாய்ப்பு தாலே... நானும் கொஞ்சம் மாணவர்களுக்கு அறிவுரை சொல்றேன்...” என்று உரிமையுடன் கேட்டுப் பெற்று, அந்த சில நிமிடங்களைச் சிறிதும் வீணாக்காமல் - அழகான தகவல்களை இரத்தினச் சுருக்கமாகத் தந்து செல்வார்.
அவ்வாறு அவர் கடைசியாக என்னிடம் உரிமையுடன் கேட்ட வாய்ப்பு, நமது “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தால் - ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் (USC) நடத்தப்பட்ட “சாலை பாதுகாப்பு ஹெல்மெட் பேரணி” நிகழ்ச்சியில்தான்! (அதில் அவர் பேசியபோது எடுத்த படம்தான் தற்போது இந்த மரணச் செய்தியிலும் இடம்பெற்றுள்ளது.)
கான் சார் வீட்டிற்குச் சென்று ஜனாஸாவைப் பார்த்தேன்... ஏதோ நடிப்புக்குப் படுத்துக் கிடப்பது போன்று காட்சியளித்தார்... அவரது உடலைப் பார்த்து அவரது மகள் உள்ளிட்ட குடும்பத்தார் விம்மி விம்மி அழுதது - அருகிலிருந்த எங்கள் கண்களையும் குளமாக்கிவிட்டது...
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.
அவர்களும், நாமும் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக...
மர்ஹூம் அவர்களது பிரிவால் துயரிலிருக்கும் அவரது அன்பு குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross