இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். எல்.கே பள்ளியில் எங்களுக்கு 10th Chemistry subject எடுத்த பண்பாளர்.
மாணவர்கள் அனைவரும் Chemistryல் 33 out of 33க்கு ஒரு மார்க் குறைந்தாலும் விடமாட்டார். மிகுந்த கண்டிப்புக்கு பேர்போனவர் என்றாலும் கலகலப்பிற்கு பஞ்சமில்லாதவர்.
நானும் பல தடவை ஊர் வந்த சமயம் அவரை சந்தித்து பேசியிருக்கிறேன், அன்பாக பேசுவார்.
அல்லாஹ் ஜல்ல ஜலாலஹூ கான் சார் அவர்களின் பாவப் பிழைகளை மன்னித்து மேலான சுவனப்பதியில் சேர்ப்பானாகவும் ஆமீன்.
3. Re:...Condolence posted byS.D.Segu Abdul Cader (Quede Millath Nagar)[23 March 2017] IP: 103.*.*.* | Comment Reference Number: 45369
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،
وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،
فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ
நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!!
மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.
ஆதாரம் :- புகாரி -7377
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.
May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family.
Aameen!
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.
6. Re:... posted byDr Sulaiman (Chennai)[23 March 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45372
Innalilahi va inna ilaihi raajivoon,
very sad to hear about the demise of Khan sir,im one of his student,he is also one of the reason for the states now I am in,Alhamdhulilah..
He was a good teacher in my class,and a best well wisher,after I exit from school.I pray to Almighty to forgive his sins, and make his resting place as jannathul firdous and give enough of sabr to his family,Aameen.
7. நெஞ்சில் நிறைந்தவர்! posted byS.K.Salih (Kayalpatnam)[24 March 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45373
எனதன்பு ஆசிரியர் கான் சார் அவர்களின் வஃபாத் செய்தி என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.
எல்.கே.மேனிலைப் பள்ளியில் அறிவியல் பாடம் நடத்தியவர். அடித்துப் போட்டாலும் கணிதமோ - வேதியலோ சத்தியமாக மண்டையில் ஏறாத எனக்கு, அவர் நடத்தியபோது மட்டும் பாஸ் மார்க் வாங்கும் அளவுக்கு வேதியல் பாடம் மண்டையில் ஏறியது என்றால் அது மிகையாகாது.
படித்து முடித்த பின், சமூகப் பணிகளில் என்னைக் காணும்போதெல்லாம் - தான் ஓர் ஆசிரியர் என்ற எண்ணம் எதுவுமில்லாமல் - ஒரு நண்பன் போல என்னுடன் நெருங்கிப் பழகினார்.
தனது மகள்கள் இருவரின் கல்விச் சாதனைகள் உள்ளிட்ட குடும்ப விபரங்களைக் கூட மகிழ்ச்சியுடன் என்னிடம் பகிர்ந்திருக்கிறார்.
அடியேன் தொடர்பு வைத்துள்ள அமைப்புகளின் பொது நிகழ்ச்சிகளில் - “ஏடே... ஒரு ரெண்டு நிமிஷம் வாய்ப்பு தாலே... நானும் கொஞ்சம் மாணவர்களுக்கு அறிவுரை சொல்றேன்...” என்று உரிமையுடன் கேட்டுப் பெற்று, அந்த சில நிமிடங்களைச் சிறிதும் வீணாக்காமல் - அழகான தகவல்களை இரத்தினச் சுருக்கமாகத் தந்து செல்வார்.
அவ்வாறு அவர் கடைசியாக என்னிடம் உரிமையுடன் கேட்ட வாய்ப்பு, நமது “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தால் - ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் (USC) நடத்தப்பட்ட “சாலை பாதுகாப்பு ஹெல்மெட் பேரணி” நிகழ்ச்சியில்தான்! (அதில் அவர் பேசியபோது எடுத்த படம்தான் தற்போது இந்த மரணச் செய்தியிலும் இடம்பெற்றுள்ளது.)
கான் சார் வீட்டிற்குச் சென்று ஜனாஸாவைப் பார்த்தேன்... ஏதோ நடிப்புக்குப் படுத்துக் கிடப்பது போன்று காட்சியளித்தார்... அவரது உடலைப் பார்த்து அவரது மகள் உள்ளிட்ட குடும்பத்தார் விம்மி விம்மி அழுதது - அருகிலிருந்த எங்கள் கண்களையும் குளமாக்கிவிட்டது...
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.
அவர்களும், நாமும் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக...
மர்ஹூம் அவர்களது பிரிவால் துயரிலிருக்கும் அவரது அன்பு குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
9. Re:... posted byTHAJUL ANAM (MADINA MUNAWARA)[24 March 2017] IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 45376
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
எல்லாம் வல்ல அல்லாஹ்,மர்ஹூம்
அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவங்களை மன்னித்தும், மண்ணறை – மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவனத்தை தந்தருள்வானாக – ஆமீன்.
11. Re:... posted byS.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.)[25 March 2017] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45378
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
"இன்னா லில்லாஹி வா இன்னா இளைஹி ராஜஹீவூன்.!!!
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். மனதிற்கு ரெம்ப கவலையாக இருந்தது. அவர் மாணவராக இருந்த காலத்தில் எனக்கு நல்ல பழக்கம். இருவரும், வெவ்வேரு பாடசாலையில் பயின்றாலும் நல்ல தொடர்பு இருந்தது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, நெல்லை புஹாரி உணவு விடுதியில் குடும்பத்துடன், இருபது வருடங்கள் பின் சந்தித்தது என் மனதில் நிழலாடுகிறது.
அவர்களும், நாமும் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக... ஆமீன், ஆமீன், யா ரப்பால் ஆலமீன்!!
மர்ஹூம் அவர்களது பிரிவால் துயரிலிருக்கும் அவரது அன்பு குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்!
மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராஹிம், எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross