காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும ஒருங்கிணைப்பில், குடும்ப அட்டை குறைகள் தொடர்பான முகாம், 26.03.2017. ஞாயிற்றுக்கிழமையன்று, நகரின் 4 இடங்களில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த தகவலறிக்கை:-
பொதுமக்களின் குடும்ப அட்டைகளிலுள்ள குறைகள் தொடர்பான முகாம், 26.03.2017. ஞாயிற்றுக்கிழமையன்று,
(1) “நடப்பது என்ன?” அலுவலகம், (தைக்கா பஜார்), பேருந்து நிலையம் எதிரில்
(2) காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு (பெரிய குத்பா பள்ளி வளாகம்)
(3) அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் (சதுக்கைத் தெரு)
(4) ரெட் ஸ்டார் சங்கம் (அப்பா பள்ளித் தெரு)
ஆகிய 4 இடங்களில், காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தால் நடத்தப்படவுள்ளது.
எதற்காக இம்முகாம்?
>>> குடும்ப அட்டையில் உள்ள அனைவரின் பெயர்களும் அரசு இணையத்தில் பதிவேற்றப்பட்டுவிட்டனவா?
>>> ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கிய பின், உடனடியாக அவரவர் கைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் (SMS) வருவதில்லையா?
>>> குடும்ப அட்டைதாரரிடம் ஒரேயொரு காஸ் சிலிண்டர் மட்டும் இருக்க, அரசு இணையத்தில் “இரண்டு சிலிண்டர்கள்” என தவறாகப் பதிவு உள்ளதால் அவர்களுக்கு மண்ணெண்ணெய் மறுக்கப்படுகிறதா?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளை வழங்கவே இம்முகாம் நடத்தப்படவுள்ளது.
இம்முகாமில் யாரெல்லாம் கலந்துகொள்ளத் தேவையில்லை?
>>> குடும்ப அட்டையில் உள்ள அனைவரின் பெயர்களும், அரசு இணையத்தில் பதிவேற்றப்பட்டுவிட்டது என உறுதியாகத் தெரிந்தவர்கள்
>>> ரேஷன் கடையில் பொருட்களை வாங்கியவுடன் குறுந்தகவலை (SMS) முறையாக தமது கைபேசியில் பெறுபவர்கள்
>>> காஸ் சிலிண்டர் எண்ணிக்கை இணையத்தில் சரியாகப் பதிவேற்றப்பட்டுள்ளது என உறுதியாகத் தெரிந்தவர்கள்
ஆகியோர் இம்முகாமில் கலந்துகொள்ள வேண்டாம்.
மேற்கண்ட குறைகளைத் தவிர வேறு குறைகள் உங்கள் குடும்ப அட்டையில் இருந்தால், அதை இம்முகாம் மூலம் தீர்க்க இயலாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|