கத்தர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் & உறுப்பினர் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், 31.03.2017. அன்று நடைபெறவுள்ளது. இதில் கத்தர் வாழ் காயலர்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அன்பின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் கத்தர் வாழ் காயலர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த ஸலாம் "அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)"
வல்ல அல்லாஹ்வின் பேரருளால், நமது கத்தர் காயல் நல மன்றத்தின் 29ஆவது பொதுக்குழுக் கூட்டம், வரும் 31.03.2017 வெள்ளிக்கிழமையன்று 09.00 மணி முதல் 18.00 மணி வரை, கத்தர் Mubaireek Parkஇல் குடும்ப சங்கம நிகழ்சியாக நடைபெறவுள்ளது.
வாகனம் & மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பொழுதுபோக்கு சிறப்பு அம்சங்களுடன் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிகளில், மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் அனைவரும் - இச்செய்தியையே அழைப்பாகக் கருதி, உங்கள் குடும்பத்தினருடன் தவறாமல் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு, கீழ்காணும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
முஹம்மத் முஹ்யித்தீன் (தொடர்பு எண்: 55 25 96 06)
ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் (தொடர்பு எண்: 55 40 29 91)
சொளுக்கு முஹம்மத் இப்ராஹீம் (தொடர்பு எண்: 33 53 86 91)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி, கத்தர் காயல் நல மன்றம்)
|