சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - SDPI கட்சியின் சார்பில் காயல்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் திரளானோர் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் அதன் மாவட்ட பொதுச் செயலாளர் எச்.ஷம்சுத்தீன் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
கோவையில் விசாரனை என்ற பெயரில் முஸ்லீம் இளைஞர் அபுதாஹிர் என்பவரை சட்டத்திற்க்கு புறம்பாக துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பொய் வழக்கு புனைந்த ,CB CID அதிகாரிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 24.03.2017 வெள்ளிகிழமை அன்று மாலை 5.00 மணியளவில் காயல்பட்டணம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை. H.சம்சுதீன் அவர்கள்,மாவட்ட பொதுச்செயலாளர் SDPI கட்சி
வரவேற்ப்புரை அஜார் அவர்கள் நகர செயலாளர், SDPIகட்சி கண்டன உரை ஷேக் அஸ்ரப் அலி ஃபைஜி அவர்கள் தலைவர் தூத்துக்குடி மாவட்ட SDPI கட்சி முன்னிலை பாஜுல் சமீர் அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர், காதர் முகைதீன் அவர்கள் மாவட்ட செயற்குழு SDPI கட்சி மற்றும் காஜா அவர்கள் தொகுதி தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட். நன்றியுரை சாகுல் அவர்கள் SDPI கட்சியின் செயல்வீரர்.
மாவட்ட தலைவரின் கண்டன உரையில் தமிழக அரசே, RSS மற்றும் இந்து முன்னனியை திருப்திபடுத்த கோவையில் அபுதாகிர் என்ற இளைஞரை சட்டத்திற்கு முரணாக துப்பாக்கி முனையில் கடத்தி சென்று, கடுமையாக சித்திரவதை செய்து பொய்யாக கொலை வழக்கு பதிவு செய்த கோவை மாவட்ட சி.பி.சி.ஐ.டி காவல்துறை அதிகாரிகளை கண்டித்து பேசினார்..
காயல்பட்டணம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 160க்கும் மேர்ப்பட்டோர் கலந்து கொண்டனர்..
கோரிக்கை:
இந்தியா முழுவதும் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்,பொய்யான பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு, 15 வருட சிறை வாசத்திற்கு பின்பு நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இனியும் நம் கண்முன் அப்பாவி ஒருவர் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தோடு,அனைத்து தரப்பு மக்களும் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதை எதிர்க்க வேண்டும். மேலும் அபுதாஹிரின் விடுதலைக்கு வேண்டி போராட அனைத்து சமுதாய மக்களும் முன்வர வேண்டும்.
தமிழக அரசு உடனே முஸ்லிம் இளைஞர் அபுதாஹிரை உடனே விடுதலை செய்ய வேண்டும். விசாரணை ஒரு சார்பாக இல்லாமல் அனைத்து ரீதியிலும் இருக்க வேண்டும். பொய் வழக்கு புனைந்து முஸ்லிம்களை பலிகடாக்களாக மாற்றி, பதவி உயர்வையும் பதக்கத்தையும் அனுபவிக்க நினைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை இந்த கண்டன கூட்டத்தின்வாயிலாக கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|