Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:35:16 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18977
#KOTW18977
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 29, 2017
புகாரிஷ் ஷரீஃப் 1438: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3123 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}





காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 28.03.2017. செவ்வாய்க்கிழமையன்று 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது. காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ திக்ர் மஜ்லிஸுக்கு தலைமை தாங்கி வழிநடத்தினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

முதல் நாள் சொற்பொழிவு 30.03.2017. வியாழக்கிழமையன்று துவங்குகிறது. அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின், கிராஅத் ஓதப்பட்டு, ‘லுத்பில் இலாஹி’ பைத் அனைவரும் பாட, அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்தின் முதல் நாள் பாடத்தை மஜ்லிஸின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஓதி துவக்கி வைக்கிறார். காலை 09.00 மணிக்கு அதற்கான விளக்கவுரை வழங்கப்படுகிறது.

முதல் நாளன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கு, இலங்கை - கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் இமாம் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ விளக்கவுரையாற்றுகிறார்.

ஏப்ரல் மாதம் 29ஆம் நாள் சனிக்கிழமையன்று அபூர்வ துஆ பிரார்த்தனையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுறுகின்றன. மறுநாள் 30.04.2017. ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலையில் நேர்ச்சை வினியோகம் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீ்ஃப் நிர்வாகிகள் மற்றும் வைபவக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...எனக்கொரு ஆசை.....
posted by mackie noohuthambi (colombo) [29 March 2017]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45391

சிறப்பான புகாரி ஷரீப் நிகழ்ச்சிகள் 90 ஆம் ஆண்டாக ஆரம்பமாகும் செய்தி மனதுக்கு உவகை தருகிறது.

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளை அள்ளி வழங்கியுள்ள புகாரி இமாம் அவர்களுக்கும் அந்த நூலில் குறிப்பிட்டுள்ள நபிமொழிகளை ஓதி உணர்ந்து செயல்பட ஒரு நல்ல வாய்ப்பினை வழங்கும் புகாரி ஷரீப் உலமாக்களும் அதை ஓதுபவர்கள், அதன் படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முனைபவர்கள் இந்த நிகழ்ச்சிகளுக்கான செலவினங்களை அல்லாஹ்வின் திரு பொருத்தத்தையும் நபிகள் நாயகம் அவர்களின் நல்லாசியையும் பெற்றுக் கொள்வதற்காக இதய சுத்தியுடன் செலவு செய்ப்பவர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

நீந்த நாட்களாக எனக்கொரு ஆசை . 30 நாட்கள் ஓதினோம் து ஆவுடன் அது நிறைவுற்றது என்றில்லாமல் இறுதி நாளன்று வந்திருப்பவர்கள் 40 ஹதீதுகள் கொண்ட ஒரு நூலை பெற்று சென்று தங்கள் வீடுகளில் வைத்து அதை படித்து அதன்படி அமல் செய்வதற்கு நமது புகாரி ஷரீப் உலமாக்கள் ஒரு முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்பதே என் ஆசை. தினசரி செலவுகளுக்கும் நேர்ச்சைநாள் செலவுகளுக்கும் தயங்காமல் பொருளாதாரத்தை அள்ளி வழங்கும் வள்ளல்கள் இந்த ஒரு காரியத்துக்கும் துணை நின்றால் அது ஒரு அழியாத பொக்கிஷமாக எல்லா வீடுகளிலும் இருக்கும்.SADHAQATHUN JAARIYAA வாகவும் அது அமையும்.

உலமாக்கள் நிறைந்த இந்த சபையில் ஒரு அறிவிப்பாக வெளியிட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று முதல்நாள் உரை ஆற்ற விருக்கும் முத்துவாப்பா ஆலிம் அவர்களுக்கும் தொடர்ந்து 30 நாட்கள் உரையாற்ற விருக்கும் ஏனைய உலமாக்களும் ஒரு அன்பு வேண்டுகோளாக இந்த நல்ல நேரத்தில் எனது ஆசையை சமர்ப்பிக்கிறேன்.

வருடா வருடம் 40 ஹதீதுகள் என்றால் இந்த 90 ஆண்டுகளில் 3600 ஹதீதுகள் வெளிவந்திருக்கும். இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு தொடங்கி வைத்தால் வரும் காலங்களில் எல்லா வீடுகளிலும் நபி மொழி 40 ஒளி வீசி மணம் பரப்பும். அல்லாஹ் அதற்கான எல்லா வசதிகளையும் தந்தருள்வானாக.

எதை கேட்டோமோ அதை வாழ்வில் எடுத்து நடக்கும் நல்ல பாக்கியத்தையும் நமக்கு வழங்கி அருள்புரிவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...வாழ்த்துக்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [30 March 2017]
IP: 37.*.*.* | Comment Reference Number: 45392

காயல்பட்டணம், புனித மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீபின் 90ம் வருட வைபவ நிகழ்ச்சிகள் அனைத்தும் நனிசிறப்புடன் நடந்தேற வல்ல நாயன் அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.A.SHEIK HALJI (Kuwait) [30 March 2017]
IP: 37.*.*.* Kuwait | Comment Reference Number: 45393

புனித புகாரிஷ்ஷரீபுநிகழ்வுகள்யாவும் இறைவனின்நல்லருளாளும் இறைத்தூதரின் நல்லாசியாளும் நனி சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. اللهم بارك لنا في رجب وشهبان وبلغن رمضان
posted by Moulavi M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [04 April 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45425

மாநபியின் மாமன்றம் காயல்பட்டணம், புனித மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீபின் 90ம் வருட வைபவ நிகழ்ச்சிகள் அனைத்தும் நனிசிறப்புடன் நடந்தேறவும் இதன் சன்மார்க்க (தஃவா ) பணிகள் கியாம பரிபந்தம் சீரும் சிறப்புமாக நடைபெறவும் இங்கு சங்கைமிக்க உலமா பெருமக்களால் கூறப்படும் புனித ஹதீஸ்களின் விளக்கங்களை நாம் எல்லோரும் செவியேற்கவும் அதன் பிரகாரம் செயல்படவும் இதற்காக உடல்,பொருள் ,ஆவி என பலவுதவிகளை , பொருளாதார உதவி புரியும் அணைத்து உள்ளூர்,வெளியூர் வெளிமாநில வெளிநாடு என அணைத்து மக்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது நல்லருளையும் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல் லல்லாஹ் அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் நல்ல துஆ பரக்கத்தையும் எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் ஈருலக சகல நற்பாக்கியங்களையும் வாரி வாரி வழங்குவானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved