தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் இரத்த தான முகாம், 05.04.2017. அன்று நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்று இரத்த தானம் செய்ய விரும்புவோர் தமது பெயர்களை முன்பதிவு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் தகவலறிக்கை:-
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து காயல்பட்டினம் நடப்பது என்ன? சமூக ஊடகக் குழும ஏற்பாட்டில், எதிர்வரும் ஏப்ரல் 05 (புதன்கிழமை) அன்று, 10.00 மணி முதல் மதியம் 14.00 மணி வரை, இரத்த தான முகாம் (BLOOD DONATION CAMP), காயல்பட்டினம் கே.எம்.டீ. மருத்துவமனையில் நடத்தப்படவுள்ளது.
இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்,
(1) அஹமத் ஸாஹிப் (+91 99943 44292)
(2) அஹமத் ஸுலைமான் (+91 999404 97897)
(3) ஃபஸல் இஸ்மாஈல் (+91 77080 18022)
ஆகிய ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரிடம் முற்கூட்டியே தமது பெயர்களைப் பதிவு செய்து, பங்கேற்பை உறுதிசெய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |