மின்னணு முறையில் அச்சடிக்கப்பட்டு வரும் குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்ட்) இன்று முதல் படிப்படியாக வினியோகிக்கப்படவுள்ளதாகவும், தனது அட்டை ஆயத்தமானதும், தமது பழைய குடும்ப அட்டை, அவரவர் கைபேசிக்கு அனுப்பப்படும் One Time Password (OTP), கைபேசி ஆகியவற்றைக் காண்பித்து, தமது நியாய விலைக் கடைகளில் புதிய மின்னணு குடும்ப அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்த தகவலறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், 01.04.2017. முதல் மின்னணு குடும்ப அட்டைகள் படிப்படியாக வழங்கப்படும்.
மின்னணு குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்பட்டவர்களுக்கு – அவர்கள் சமர்ப்பித்திருந்த கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) மற்றும் 8 இலக்க ஒருமுறை கடவுச்சொல் (One Time Password – OTP) வரப்பெற்றவுடன், தொடர்புடைய குடும்ப அட்டைதாரர்கள் தமது பழைய குடும்ப அட்டை, கைபேசியுடன் – தொடர்புடைய நியாய விலைக் கடையில் வந்து மின்னணு குடும்ப அட்டை (Smart Family Card)யைப் பெற்றுக்கொள்ளலாம். |