டீசல் விலை, காப்பீட்டுக் கட்டணம் (Insurance) உயர்வைக் கண்டித்து, காயல்பட்டினம் பாவலர் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் நலச் சங்கம் சார்பில், ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம், 30.03.2017. வியாழக்கிழமையன்று, காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் – வாடகை வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நடைபெற்றது.
சங்க தலைவர் எஸ்.என்.முஹம்மத் அலீ தலைமையேற்றார். செயலாளர் வி.முத்து ராஜ், பொருளாளர் ஏ.பேச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகிக்க, வாடகை வாகன ஓட்டுநர்களான – சங்க உறுப்பினர்கள் இணைந்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
தகவல் & படம்:
வீனஸ் ஸ்டூடியோ – காயல்பட்டினம்.
|